வெறும் ரூ. 5,990 விலையில் ஐபோன்! ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆபர்!

ஐபோன் எஸ்இ 2020 மொபைலானது ப்ளிப்கார்ட்டில் ரூ.11490 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.  இதன் அசல் தொகை முன்னர் ரூ.39,990 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Written by - RK Spark | Last Updated : Jan 8, 2023, 12:27 PM IST
  • ஐபோன் மொபைலுக்கு அதிரடி தள்ளுபடி.
  • ப்ளிப்கார்ட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.
  • இதன் அசல் தொகை முன்னர் ரூ.39,990 ஆக இருந்தது.
வெறும் ரூ. 5,990 விலையில் ஐபோன்! ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆபர்! title=

பலருக்கும் ஐபோன் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும், சந்தையில் பிரபலமாக இருக்கும் ஐபோன் விலை அதிகமாக இருப்பதால் பலரால் வாங்கமுடிவதில்லை.  மிகவும் விலை உயர்ந்த ஐபோன்களை வாங்கும்போது அது நமது பட்ஜெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  ஆனால் இப்போது நீங்கள் ஐபோனின் விலையை பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை, ஏனெனில் இப்போது இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட்டில் உங்களுக்கு குறைந்த விலையில் ஐபோன் கிடைக்கிறது.  ப்ளிப்கார்ட் இப்போது ஐபோன் எஸ்இ 2020ஐ மிக குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சந்தையில் உள்ள சிறந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஐபோன் எஸ்இ 2020 ஸ்மார்ட்போன்களும்  ஒன்றாகும், இருப்பினும் இது முந்தைய முதன்மை ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்-ன் அதே மேம்பட்ட ஏ13 பயோனிக் சிப்பைக் கொண்டுள்ளது.  சிறப்பான செயல்திறனுடன் கூடிய இந்த ஐபோனை நீங்கள் உங்கள் பட்ஜெட்டில் இழப்பு ஏற்பட்டுவிடாமல் மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்.  ஐபோன் எஸ்இ 2020 மொபைலானது ப்ளிப்கார்ட்டில் ரூ.11490 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.  இதன் அசல் தொகை முன்னர் ரூ.39,990 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்

இதுதவிர ப்ளிப்கார்ட் உங்களுக்கு பழைய மொபைலுக்கு சிறப்பான சலுகைகளையும் வழங்குகிறது, இதன் மூலம் உங்களுக்கு ஆகும் கூடுதல் செலவும் குறைகிறது.  அதேசமயம் நீங்கள் பரிமாற்றம் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து நீங்கள் வாங்கும் புதிய ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படும். பழைய ஸ்மார்ட்போனை மாற்றி புதிய ஐபோனை வாங்கும்போது அதிகபட்சமாக ரூ.23000 வரை தள்ளுபடி செய்யப்படும்.  இவ்வளவு சலுகைகளுடன் சேர்த்து உங்களுக்கு ஐபோன் எஸ்இ 2020ஐ நீங்கள் வெறும் ரூ.5990க்கு வாங்கலாம்.  64 ஜிபி மாடல் மொபைலுக்கு மட்டும் இந்த சலுகைகள் வழங்கப்படுவதுவதில்லை, நீங்கள் 128 ஜிபி மாடல் மொபைலை தள்ளுபடி விலையில் ரூ.9,990க்கு பெறலாம்.

மேலும் வங்கி மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் ப்ளிப்கார்ட் நிறுவனம் பலவிதமான தள்ளுபடிகளை வழங்குகிறது.  உதாரணமாக, நீங்கள் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மொபைலை வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு ரூ.1500 மிச்சமாகும்.  ஐடிஎஃப்சி பர்ஸ்ட் கிரெடிட் கார்டை பயன்படுத்தி தவணை முறையில் மொபைலை வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும் மற்றும் இண்டஸ்லேண்ட் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி தவணை முறையில் மொபைலை வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.  மேலும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு 5% கேஷ்பேக் மற்றும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | தினசரி 2 ஜிபி டேட்டா.. 160 நாட்கள் வேலிடிட்டி.. BSNL அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News