iPhone 13 விலையில் வீழ்ச்சி: பிளிப்கார்ட் சலுகையால் குஷியில் வாடிக்கையாளர்கள்
iPhone 13: அதிக விலை காரணமாக ஐபோன் 13 -ஐ வாங்கத் தயங்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆப்பிள் ஐபோன் 13 டீல்: ஐபோன் 13 என்பது அனைவரும் வாங்க விரும்பும் ஒரு அசத்தலான மாடலாகும். இதன் விலை உயர்ந்ததாக இருந்தாலும், இது பயனர்கள் இடையே மிகப்பெரிய ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இந்த ஐபோனுக்கு, ஐபோன் 14 போன்ற அதே அளவு டிமாண்ட் உள்ளது. ஐபோன் 13 -ல் கிடைக்கும் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளே இதற்கு காரணமாகும்.
இந்த மாடல் வடிவமைப்பு முதல் அம்சங்கள் வரை அனைத்து வகையிலும் மிகவும் வலுவானது. இதை வாங்குவது சில வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டில் ஒத்துவராத விஷயமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதன் அதிகமான விலை காரணமாக பலரால் இதை வாங்க முடிவதில்லை.
அதிக விலை காரணமாக ஐபோன் 13 -ஐ வாங்கத் தயங்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த மாடலில் பிளிப்கார்ட்டில் வழங்கப்படும் தள்ளுபடி சலுகையை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சலுகையின் மூலம் மிக குறைந்த விலையில் இந்த ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இந்தச் சலுகை ஐபோனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையையால் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளை பெறலாம்.
பிளிப்கார்ட்டில் தள்ளுபடி கிடைக்கும்
தள்ளுபடியைப் பற்றி பேசினால், வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனில் ஒரு நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 13 (மிட்நைட், 128 ஜிபி) விலை பற்றி பேசினால், வாடிக்கையாளர்கள் பட்டியலிடப்பட்ட விலையாக (லிஸ்டட் ப்ரைஸ்) ரூ.61,999 செலுத்த வேண்டும். அதேசமயம் அதன் உண்மையான விலை ரூ.69,900 ஆகும். இந்த விலையில் 11% தள்ளுபடிக்குப் பிறகு இந்த சலுகை கிடைக்கும்.
மேலும் படிக்க | மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி..! அழைப்புகள், SMS-ல் மிகப்பெரிய மாற்றம்
இந்த விலையும் உங்களுக்கு அதிகமாகத் தோன்றினால், இப்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த மாடலில் உங்களுக்கு மேலும் நல்ல டீல் கிடைக்கிறது.
பரிமாற்றச் சலுகையால் பலன்
ஐபோன் 13 இன் இந்த மாறுபாட்டில் ரூ.29,250 பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது என்பதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் இது உண்மையாகும். இந்த சலுகையை பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் இதை வாங்க ரூ.61,999 செலுத்த வேண்டியதில்லை. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் தொகை ரூ.61,999 இலிருந்து குறைக்கப்படும். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்க ரூ.32,749 மட்டும் செலுத்தினால் போதும்.
இது ஒரு மிகப்பெரிய லாபகரமான டீல் ஆகும். வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிளிப்கார்ட் டீல் மிகவும் பிடித்துள்ளது. இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த டீலின் மூலம் வாடிக்கையாளர்கள் மிக அதிக தள்ளுபடியுடன் அவர்களுக்கு பிடித்தமான ஐபோன் 13 ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
மேலும் படிக்க | அட... கூகுள் தகவல் மட்டும் கொடுக்கலை... ‘இவற்றை’ எல்லாம் கூட கொடுக்கிறது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ