மாருதி கார் தள்ளுபடி சலுகைகள்: இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில், மாருதி அதன் நெக்ஸா வரம்பின் சில மாடல்களான இக்னிஸ், பலேனோ மற்றும் சியாஸ் ஆகிய கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. அவற்றின் 2022 (MY22) மாடல் மற்றும் MY23 மாடல் இரண்டிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு மாடலுக்கு அதிக தள்ளுபடி உள்ளது, அதே நேரத்தில் MY23 மாடலுக்கு குறைந்த தள்ளுபடி கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேதியை நினைவில் கொள்ளவும்


MY22 மாடல்களில் ரொக்க தள்ளுபடி ஜனவரி 16, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை வாடிகையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் MY23 மாடல்களுக்கு மாதம் முழுவதும் சலுகைகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள் 


மாருதி இக்னிஸ் காரில் கிடைக்கும் சலுகைகள்


மாருதி இக்னிஸில் ரூ. 30,000 வரை (MY22) மற்றும் ரூ. 15,000  வரை (MY23) ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. இது தவிர எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற போன்ஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி இரண்டிலும் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.5,000 வரை கிடைக்கின்றன. இதன்படி, MY22 மாடலில் மொத்தம் ரூ.50,000 மற்றும் MY23 மாடலில் ரூ.35,000 மொத்த பலன் வழங்கப்படுகிறது. மாருதி இக்னிஸ் காரின் விலை ரூ.5.35 லட்சம் முதல் ரூ.7.72 லட்சம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மாருதி பலேனோவில் கிடைக்கும் சலுகைகள்


மாருதி பலேனாவின் MY22-ல் மட்டுமே சலுகை செல்லுபடியாகும். இதில் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் டாப் ஆல்ஃபா எம்டி வகைகளில் மட்டுமே உள்ளது. அதன் MY23 மாடலில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. மாருதி பலேனோவின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.71 லட்சம் வரை உள்ளது.


மாருதி சியாஸ் காரில் கிடைக்கும் சலுகைகள்


மாருதி சியாஸில் ரூ.35,000 வரை ரொக்கத் தள்ளுபடி  (MY22) கிடைக்கிறது. MY23 மாடலில் ரொக்கத் தள்ளுபடி இல்லை. எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி இரண்டும் முறையே ரூ.25,000 மற்றும் ரூ.5,000 கிடைக்கும். இந்த வகையில், MY22 மாடலில் ரூ.65,000 மொத்த லாபமும் MY23 மாடலில் ரூ.30,000 லாபமும் கிடைக்கும். காரின் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.11.98 லட்சம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்தியாவின் ஆடம்பர மின்சார கார்கள்! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ