iPhone 14 Pro Max டீல்: iPhone 14 Pro Max என்பது நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் மாடல். இது ஒரு விலையுயர்ந்த மாடலாக கருதப்படுகின்றது. இந்த மாடலின் விலை தற்போது பிளிப்கார்ட்டில் 13,9900 ரூபாயாக உள்ளது. அதாவது இதன் விலை தோராயமாக ரூ. 14,000 ஆக உள்ளது. ஆனால், இவ்வளவு அதிகமான விலை காரணமாக அனைவராலும் இதை வாங்க முடிவதில்லை. இருப்பினும், இப்போது இந்த போனை இன்னும் மலிவு விலையில் வாங்க முடியும். இப்போது நீங்கள் விரும்பினால், அதை மலிவு விலையில் வாங்கலாம்.
பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு iPhone 14 Pro Max ஐ வாங்கும்போது அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. குறைந்த விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் தள்ளுபடி எவ்வளவு கிடைக்கும்?
இது ஒரு ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும். ஆகையால் வாடிக்கையாளர்களுக்கு பொதுவாக இதில் சேமிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இந்த முறை பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் பிக் பசத் தமால் விற்பனையில் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் இந்த மாடலை வாங்கினால் ரூ. 23,000 வரை சேமிக்கலாம். அதாவது வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேமிப்பு இருக்கும்.
மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்: இதில் கிடைக்கும் சலுகை என்ன
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் 128 ஜிபி மாறுபாட்டை வாங்குவதற்கு ஃப்ளிப்கார்ட் 23, 000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற சலுகையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், அவர்கள் இந்த சலுகை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனின் நிலை நன்றாக இருப்பதையும், போன் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது, இந்த சலுகையின் தொகை, உண்மையான விலை, அதாவது ரூ. 1,39,900-லிருந்து கழிக்கப்படும்.
ஒரு வேளை, போனின் நிலையில் குறைபாடுகள் இருந்தாலும், சுமார் ரூ.15,000 முதல் ரூ. 20,000 வரை கண்டிப்பாக வழங்கப்படும். இந்த விலை போனின் விலையிலிருந்து குறைக்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல டீலாக இருக்கும்.
மேலும் படிக்க | Xiaomi இணையதளத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் SuperNote!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ