Flipkart Sale: டாப் பிராண்ட் போன்களுக்கு பம்பர் தள்ளுபடி, அசத்தல் சலுகை
Flipkart Sale: செப்டம்பர் 23, 2022 அன்று Flipkart Big Billion Days Sale விற்பனை தொடங்க உள்ளது. அதற்கு முன், நீங்கள் விரும்பும் போனை எப்படி மலிவாக வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: பிளிப்கார்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart Big Billion Days Sale தொடங்கும் முன்பே, பிளிப்கார்டில் பல அற்புதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிட்-ரேஞ்ச் போன்கள் முதல் பிரீமியம் பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் வரை, அனைத்து போன்களிலும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 23, 2022 அன்று Flipkart Big Billion Days Sale விற்பனை தொடங்க உள்ளது. அதற்கு முன், நீங்கள் விரும்பும் போனை எப்படி மலிவாக வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். பிளிப்கார்டின் விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் நீங்கள் இந்த போன்களை பாதிக்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.
சாம்சங் கேலக்சி எஸ்22 பிளஸ் 5ஜி
இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 128ஜிபி மாடல் ரூ.1,01,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விற்பனையின் கீழ் ரூ.69,999க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இதை வாங்கினால், ரூ.3,500 தள்ளுபடி பெறலாம். மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.19,000 சேமிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த போனை ரூ.47,499க்கு வாடிக்கையாளர்களால் வாங்க முடியும்.
போகோ எக்ஸ்4 5ஜி:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த 5ஜி போன், அதன் அசல் விலையான ரூ.23,999க்கு பதிலாக ரூ.16,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய போனுக்கு ஈடாக பரிமாற்ற சலுகையில் இந்த போனை வாங்கினால் ரூ.15,920 வரை சேமிக்கலாம். இதன் மூலம் இந்த போக்கோ போனின் விலை ரூ.579 ஆக குறையும்.
ஓப்போ கெ10 5ஜி:
ஓப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.16,499க்கு பதிலாக ரூ.10,999க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது விற்பனை சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் இந்த போனில் ரூ.15,920 வரை சேமிக்கலாம், இந்த சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த போனின் விலை ரூ.579 ஆக இருக்கும்.
சியோமி 11ஐ 5ஜி:
இந்த விற்பனையில் ரூ.24,999க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.29,999 ஆகும். இந்த போனை வாங்கும்போது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பாங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.1,250 சேமிக்கலாம். பரிமாற்ற சலுகையில் பழைய போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், 22 ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தலாம். இதன் மூலம் இந்த போனை வெறும் ரூ.1,749க்கு இந்த போனை வாங்கிச்செல்லலாம்.
விவோ வி21 5ஜி:
விவோவின் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அசல் விலையான ரூ.32,990ல் இருந்து ரூ.27,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பரிமாற்ற சலுகையில், பழைய போனுக்கு ஈடாக இதை வாங்கினால், 19 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும் இந்த சலுகையின் முழு பலனைப் பெற்ற பிறகு, இந்த போனின் விலை ரூ.2,990 ஆக குறையும்.
மேலும் படிக்க | ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வைரல்! செய்யக்கூடாத தவறுகள் இவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ