ஒப்போ சமீபத்தில் ஒப்போ ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8Z ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று சாதனங்களும் 5ஜி இணைப்பை ஆதரிக்கின்றன. பிரைஸ்பாபாவின் புதிய அறிக்கையின்படி, சீன உற்பத்தியாளர் ரெனோ 8 தொடரின் மற்றொரு தொலைபேசியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறார், இது ரெனோ 8 4ஜி என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு தொடரமான தகவல் அதன் ரெண்டர்கள் மற்றும் முக்கிய குறிப்புகள் கசிந்துள்ளது. விரிவாக தெரிந்து கொள்வோம்...
ஒப்போ ரெனோ 8 4ஜி விவரக்குறிப்புகள்
ஒப்போ ரெனோ 8 4ஜி ஆனது 6.43-இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது ஃபுல் எச்.டி+ ரிஜல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல் இதில் பஞ்ச்-ஹோல் பேனலில் 32எம்பி செல்ஃபி கேமரா இருக்கும்.
மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி
ஒப்போ ரெனோ 8 4ஜி கேமரா
ஒப்போ ரெனோ 8 4ஜி இன் பின்புற கேமரா அமைப்பு 64-மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். மேக்ரோ மற்றும் டெப்த் ஷொட்ஸூக்கு 2-மெகாபிக்சல் கேமராக்களுடன் இணைக்கப்படும். சாதனம் கலர்ஓஎஸ் 12 யுஐ உடன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் முன்பே லோட் செய்யப்பட்டது இருக்கும்.
ஒப்போ ரெனோ 8 4ஜி பேட்டரி
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 சிப் சாதனத்தை இயக்கும். இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி பில்ட்-இன் ஸ்டோரேஜ் ஐ கொண்டிருக்கும். சாதனம் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். அதேபோல் இந்த சாதனத்தில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஒப்போ ரெனோ 8 4ஜி விலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலே ஸ்மார்ட்போனின் டான்லைட் கோல்ட் மற்றும் ஸ்டார்லைட் பிளாக் வண்ண வகைகள் காட்டப்பட்டுள்ளன. இந்த சாதனம் வரும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சாதனம் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ