ஃபிளிப்கார்ட்டில் கடந்த சில நாட்களாக பிக் சேவிங் டேஸ் விற்பனை (Big Savings Days Sale) நடந்து வருகிறது. இந்த விற்பனையின் கடைசி நாள் இன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில் பல வகையான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் ஸ்மார்ட் டிவிகளில் (Smart TV https://zeenews.india.com/tamil/technology/fantastic-flipkart-offer-buy-latest-smart-tv-at-rs-27500-discount-in-flipkart-big-saving-days-sale-377635) கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


பிளிப்கார்டின் இந்த அசத்தல் விற்பனையில், சாம்சங்கின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கும் குறைவான விலையில் வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். இந்த அற்புதமான சலுகையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.


சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிக மலிவாக வாங்குவதற்கான வழி 


Samsung Crystal 4K 108 cm (43 inch) Ultra HD LED ஸ்மார்ட் டிவியின் விலை சந்தையில் ரூ.52,900 ஆகும். பிளிப்கார்டின் (Flipkart https://zeenews.india.com/tamil/technology/bumper-discounts-offers-in-flipkart-electronics-sale-amazing-deals-in-big-saving-days-2022-sale-380081) இந்த விற்பனையில், இந்த டிவி-க்கு 30% தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு அதன் விலை ரூ.36,999 ஆக குறைந்துள்ளது. 


ALSO READ | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale 


வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10%, அதாவது ரூ.1,250 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் டிவியின் விலை 35,749 ஆகக்குறையும். 


எக்ஸ்சேஞ்ச் சலுகை காரணமாக டிவியின் விலை பாதிக்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளது


Flipkart விற்பனையின் இந்த டீலில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவிக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால், Samsung Crystal 4K 108 cm (43 inch) Ultra HD LED Smart TV-யை ரூ. 52,900க்குப் பதிலாக வெறும் ரூ. 24,749க்கு வாங்கலாம்.


சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் அருமையான அம்சங்கள்


சாம்சங்கின் (Samsung) Samsung Crystal 4K 108 cm (43 inch) அல்ட்ரா HD LED ஸ்மார்ட் டிவி, ஒரு அல்ட்ரா HD 4K LED ஸ்மார்ட் டிவி ஆகும். Tizen ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்யும் இந்த டிவியில், 43 இன்ச் அல்ட்ரா HD 4K LED டிஸ்ப்ளே மற்றும் 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவி 20W இன் ஒலி வெளியீடு மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கக்து. இந்த டிவியில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. 


Flipkart இன் இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜனவரி 17 அன்று தொடங்கியது. இன்று இந்த விற்பனையின் கடைசி நாளாகும்.


ALSO READ | 35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR