Ulefone சில நாட்களுக்கு முன்பு ஆர்மர் 12 5G ஸ்மார்ட்போனைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது ஸ்மார்ட்போன் ரசிகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றது. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடியான விலை காரணமாக உலகம் முழுவதும் இந்த போன் பல நேர்மறையான கருத்துகளைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போன் AliExpress தளம் மூலம், இப்போது 199.99 டாலர் (தோராயமாக ரூ. 15 ஆயிரம்) என்ற விலையில் தொடங்கும் ப்ரீ-பெய்ட் ஆர்டர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள Ulefone 12 5G ஸ்மார்ட்போனில் ஒரு புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு உள்ளது. இதில், "X" என்ற எழுத்து, போனில் பல இடங்களில் உள்ளது. இந்த தொலைபேசியின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


Ulefone Armour 12 ஐ பாதி விலையில் வாங்கலாம்


இந்த தொலைபேசியின் (Mobile Phone) விலை 399.99 டாலர் (சுமார் 30 ஆயிரம் ரூபாய்) ஆகும். ஆனால் இந்த போனுக்கான ப்ரீ-புக்கிங் செய்தால், பயனர்கள் இதை 199.99 டாலருக்கு (சுமார் 15 ஆயிரம் ரூபாய்) வாங்கலாம். ஆனால் இந்த சலுகை முதலில் புக் செய்யும் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். இந்த சலுகை ஆகஸ்ட் 27 அன்று வரை மட்டுமே உள்ளது.


அதன் பிறகு மற்றொரு சலுகை உள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரை இந்த போனை முன்பதிவு செய்தால், நீங்கள் 279.99 டாலர் (ரூ. 20,785) மட்டுமே செலுத்தினால் போதும். ஆனால் இந்த சலுகையும் முதல் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும். 500 போன்களை விற்ற பிறகு, இந்த போனின் விலை மீண்டும் 399.99 டாலர் ஆகி விடும்.


ALSO READ: Motorola Edge 20 விற்பனை காலவரையின்றி ஒத்திவைப்பு


Ulefone Armor 12 -ன் சிறப்பம்சங்கள்


Ulefone Armor 12 5 ஜி ஸ்மார்ட்போன் (Smartphone) 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இந்த போன் 6.52 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில், சில்வர் இயான் பெஸ்ட் அடிடிவ்ஸ் அடிப்படையிலான பாக்டீரியா எதிர்ப்பு பூச்சு உள்ளது. இது பயனரை பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.


Ulefone Armor 12-வின் கேமரா


Ulefone Armor 12 குவாட்-ரியர் கேமரா அமைப்புடன் வரும். இதன் முதன்மை சென்சார் 48 எம்பி-யுடனானது, 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை இதில் உள்ளன. இந்த போன் இரட்டை 1216 சூப்பர்-லீனியர் ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 7 மேக்னெட் சவுண்ட் யூனிட் மற்றும் 106 டிபி சவுண்ட் லவுட்னசுடன் வருகிறது.


Ulefone Armor 12-ன் மற்ற அம்சங்கள்


தொலைபேசியில் 5180mAh பேட்டரி உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 OS இல் இயங்குகிறது.


ALSO READ: Realme-யின் தீபாவளி பரிசு: அட்டகாசமான Washing Machine-ஐ அறிமுகம் செய்யவுள்ளது நிறுவனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR