5 லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட் கார்கள்! கையைக் கடிக்காத சூப்பர் மைலேஜ் கார்கள்
Budget Cars Under 5 Lakh Rupees : கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பட்ஜெட் கார்கள்
இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்துக்காக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதிலும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதைவிட சொந்த வாகனம் வைத்திருக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கடன் வாங்கியாவது சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் கார்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஒரு காரின் குறைந்தபட்ச விலை என்னவாக இருக்கும் என்பதை நிர்ணயித்துவிடலாம். ஆனா, அதிகபட்சம் எந்த விலையில் கார் இருக்கிறது என்பதைக் கேட்டால் தலை சுற்றலாம். அப்படி விலை உயர்ந்த கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் விலையுள்ள கார்களில் மிகவும் தரமான கார்கள் என பெயர் பெற்ற கார்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். இந்த கார்கள் பட்ஜெட் விலையில் உள்ள அதிக மைலேஜ் கொடுக்கும் கார்கள் ஆகும்.
மாருதி ஆல்டோ கே10
மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே 10 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் ஆகும். இந்தக் காரில் 998சிசி இன்ஜின் உள்ளது. CNG கொண்ட காரும் கிடைக்கிறாது. பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 22.97 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மைலேஜ் 33.85 கிமீ/கிலோவாகவும் இருக்கும் இந்த கார், புதுப்பிக்கப்பட்ட ஹார்டெக்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய Alto K10 காரில் 7-இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ தவிர, இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் USB, ப்ளூடூத் மற்றும் AUX கேபிளால் இயங்குகிறது. ஹேட்ச்பேக்கில் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் விநியோகம் (EBD), ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் என்ட்ரி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ள மாருதி ஆல்டோ கே10 காரில் ப்ரீ-டென்ஷனர் கொண்டது. பாதுகாப்பான பார்க்கிங்கிற்காக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதியும் உண்டு.
மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.27 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் எஸ்-பிரஸ்ஸோ காரில் 998சிசி இன்ஜின் உள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கும் இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 24.14 கிமீ மைலேஜ் தரும். சிஎன்ஜியின் மைலேஜ் 32.73 கிமீ/கிகி வரை உள்ளது.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன் பவர் ஜன்னல்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM மற்றும் கேபின் ஏர் ஃபில்டர் ஆகியவற்றைக் கொண்ட 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட அருமையான கார் மாருதி எஸ்-பிரஸ்ஸோ ஆகும்.
ரெனால்ட் KWID
ரூ.4.69 லட்சம் கொண்ட ரொனால்ட் க்விட் காரில் 998சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, ஜியோ பிளேபேக் மற்றும் வாயர் அங்கீகாரத்துடன் கூடிய முதல்-வகுப்பு 8-இன்ச் தொடுதிரை MediaNAV எவல்யூஷன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட கார் இது.
ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, அதிவேக எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் ப்ரீ-டென்ஷனர் போன்ற அம்சங்கள் கொண்டது ரெனால்ட் க்விட் கார்.
மேலும் படிக்க | ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ