தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, புதிய சாதனங்கள் வருகையும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், குறைந்த விலையில் நவீனமயமான போன் வாங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசையிருக்கும். அதிலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும் என்ற ஆசை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.சந்தையில் கிடைக்கும் 5ஜி போன்களில் இந்த ஆண்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
5G மொபைல்
அதிக செலவு இல்லாமல் 5G போன் வாங்கலாம் என்றால், அவற்றில் விலை குறைந்த ஏழு போன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Poco M6 5G
பிளிப்கார்ட்டில் Poco M6 5G போன் ரூ.8,999 முதல் கிடைகக்கிறது. 6.74 இன்ச் 90 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் எச்டி+ ரெசல்யூஷன் என்ற ரெசல்யூசனில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது, 50 எம்பி டூயல் கேமராக்கள் மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட் உடன் வரும் இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்டது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டு, ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது.
லாவா பிளேஸ் 5 ஜி
ரூ.9,299 என்ற விலையில் அமேசானில் Lava Blaze 5G கிடைக்கிறது. 6.52-இன்ச் 90Hz ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் HD+ ரெசல்யூஷன், 50MP டிரிபிள் கேமராக்கள் கொண்டது. 700 SoC கொண்ட இந்த போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்டது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியில் ஆண்ட்ராய்டு 12ல் இயங்குகிறது.
மேலும் படிக்க | Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!
ரூ.9,999 போகோ M6 Pro 5G
Poco M6 Pro 5G விலை ரூ.9,999. ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் 90 ஹெர்ட்ஸ் சக்தி கொண்டது. ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் எஃப்எச்டி+ ரெசல்யூஷன் உடன், 50எம்பி டூயல் கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் கொண்டது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்ட போகோ எம்6 5 ஜி போன், ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த போன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரிக் கொண்டுள்ளது.
நோக்கியா ஜி42 5ஜி
9,999 ரூபாய் விலையில் ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் நோக்கியா G42 5G ஸ்மார்ட்போன், 6.56-இன்ச் 90Hz ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் வருகிறது, 50MP டிரிபிள் கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 480+ 5G சிப்செட் ஆகியவற்றுடன் வரும் இந்த போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் உள்ளது. இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ள நோக்கிய ஜி42 ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது.
ரெட்மி 13C 5G
10,499 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கும் 13C 5G ரெட்மி போனுக்கு சில வங்கிகளின் கார்டில் பணம் செலுத்தினால் 1,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். 6.74 இன்ச் 90 ஹெர்ட்ஸ் கொண்டுள்ள ஸ்மார்ட்போனில் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, எச்டி+ ரெசல்யூஷன், 50எம்பி டூயல் கேமராக்கள் மற்றும் டைமன்சிட்டி 6100+ சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த போன், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வரும் இந்த போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ஜி34 5ஜி
ஃப்ளிப்கார்ட்டில் ரூ.10,999க்கு கிடைக்கும் மோட்டோரோலா ஜி34 5ஜி 5ஜி போனுக்கு ஆக்சிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளில் வாங்கினால்1,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன், எச்டி+ ரெசல்யூஷன், 50எம்பி டூயல் கேமராக்கள் கொண்டது. ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் உடன் வரும் மோட்டாரொலாவின் இந்த போன், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகம் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள 5,000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன், ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது.
ரியல்மி C65 5G
10,499 ரூபாய் விலையில் ரியல்மி C65 5G கிடைக்கிறது. சில வங்கி அட்டைகளில் இந்த போனுக்கு ரூ.1,000 வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் இந்த போன், 6.67 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, எச்டி+ ரெசல்யூஷன் கொண்ட ரியல்மி சி65 ஸ்மார்ட்போன், 50 எம்பி பிரதான கேமரா மற்றும் டைமன்சிட்டி 6300 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகமும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது.
மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ