குளிரூட்டியில் இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று மெட்டல் அல்லது இரும்பு குளிர்விப்பான் மற்றும் மற்றொன்று பிளாஸ்டிக் குளிர்விப்பான். குளிரூட்டியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதன் பயன்பாடு, ஏர் கூலரில் இருக்கும் தொட்டி திறன், ஆற்றல் நுகர்வு மற்றும் வாரண்டி காலம் போன்ற சில விஷயங்களைக் கவனித்துக்கொள்வது முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடை வெயில் கொளுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏர் கூலர்கள் இந்தியாவில் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கோடையில் அதிகமாக கொளுத்திக் கொண்டிருக்கும் வெப்பநிலையால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. அவை பயன்படுத்த எளிதானவை மட்டுமல்ல, பெரும்பாலானவர்கள் எளிதில் வாங்க கூடிய வகையில் பட்ஜெட்டில் வருகின்றன. அதனால் பெரும்பாலோர் ஏர் கூலர் வாங்குவதை விரும்புகின்றனர்.  


பிளாஸ்டிக் ஏர் கூலர்


வீடு அல்லது அலுவலகத்தின் வெவ்வேறு அறைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழலை மாற்றுவதற்கு பிளாஸ்டிக் ஏர் கூலர்கள் சிறந்தது. கூடுதலாக, அவை மெட்டல் ஏர்கூலர்களை விட மலிவு விலையில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் காற்று குளிரூட்டிகள் பல்வேறு வடிவமைப்புகள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. இதனால் பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குளிரூட்டியை தேர்வு செய்யலாம்.


மேலும் படிக்க | ட்விட்டர் அதிரடி: MeitY, MIB உட்பட முக்கிய கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்


இவை நீரை குறைவாக எடுத்துக்கொள்ளும் மற்றும் நீண்ட நேரம் குளிர்ச்சியை கொடுக்கும். இது வீடுகள் அல்லது அலுவலகங்களில் பிரபலமான தேர்வாக அமைகிறது. குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் பயன்படுத்த சரியானவை. இவை இயங்குவதற்கு மிகக் குறைந்த மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது.


மெட்டல் குளிர்விப்பான்


மெட்டல் ஏர் கூலர்கள் மிகவும் சக்திவாய்ந்த குளிரூட்டும் தீர்வை விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த வழி. இவற்றுடன் ஒப்பிடும்போது, ​​பிளாஸ்டிக் ஏர் கூலர்களை விட மெட்டல் ஏர் கூலர்கள் விலை அதிகம். ஆனால் பல நன்மைகள் இருப்பதால் அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உலோக காற்று குளிரூட்டிகள் பெரிய பகுதிகளை குளிர்விக்கும் திறன் கொண்டவை. உலோக குளிரூட்டியில் வலுவான மோட்டார் மற்றும் விசிறி உள்ளது. இது அதிக காற்று சுழற்சிக்கு வேலை செய்கிறது. உலோக காற்று குளிரூட்டிகள் மிகவும் நீடித்தவை. 


இவை வடிவமைப்பு உடைந்து அல்லது சேதமடையாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இருப்பினும், பிளாஸ்டிக் குளிரூட்டிகளை விட அவற்றின் விலை அதிகம். அதேநேரத்தில் உலோக காற்று குளிரூட்டிகள் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. அவை பிளாஸ்டிக் ஏர் கூலர்களை விட அதிக எடை கொண்டவை. அதிக விலை கொண்டவை. இதை வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். பட்ஜெட் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது உகந்ததல்ல. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் செய்தி: இனி வீட்டிலிருந்தபடியே இந்த வசதி கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ