ரூ.2000 -ல் 4ஜி மொபைல் - 2 ஆண்டுகளுக்கு No ரீச்சார்ஜ் ..!
2 ஆயிரம் ரூபாயில் 4 ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 2 ஆண்டுகளுக்கு ரீச்சார்ஜ் செய்யத் தேவையில்லை என்றால் இந்த போனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன் என்றாலே 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் தான் ஓரளவுக்கான தரம் இருக்கும் என்ற நிலை இப்போது இருக்கிறது. ஆனால், அந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியாதவர்கள் இருப்பவர்கள் ஏராளம். அவர்களுக்கும் 4ஜி நெட்வொர்க்கில் இணையத்தில் உலாவ வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், அப்படியான ஸ்மார்ட்போன் எங்கே இருக்கிறது? என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ALSO READ | ரூ.10-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் நிறுவனங்கள்..!
அப்படியானவர்களுக்காக ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபோன் தான் ரிலையன்ஸ் ஜியோ ஃபோன். ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான ப்யூச்சர்கள் இருக்கிறது. ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே. அதாவது, டச் ஸ்கிரீன் இல்லாத கீ பேட் போன். அதேநேரத்தில் இதில் இருக்கும் சில கூடுதலான ஃபியூச்சர்களை தெரிந்து கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோ ஃபோனில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 1500 mAh பேட்டரி உள்ளது. இந்த ஃபோன் 9 மணிநேர டாக்டைமைக் கொண்டுள்ளது. இந்த போனில் 128 ஜிபி SD கார்டை சேர்த்துக் கொள்ள முடியும்.
மொபைல் வாங்கும் யூசர்களுக்கு 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ வெப்சட்டில் பதிவிட்டிருக்கும் தகவல்படி, இந்த போனின் விலை 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 4 ஜி போனான இதற்கு 2 ஆண்டுகள் நீங்கள் ரீச்சார்ஜ் செய்யத்தேவையில்லை. அதுமட்டுமா..! 2 ஆண்டுகளுக்கு டேட்டாவும் உங்களுக்கு இலவசம். இந்த போனுக்கு போட்டியாக நோக்கியா உள்ளிட்ட பிராண்டுகள் களமிறக்கப்பட்டாலும், 4 ஜியில் வரக்கூடிய ஒரே போன் இதுதான்.
ALSO READ | Vivo-வின் இரண்டு அசத்தலான போன்கள் அறிமுகம்: மிகக்குறைந்த விலை, அசத்தல் அம்சங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR