மலிவு விலை கார்கள்: மலிவு விலை காரணமாக பலர் பயன்படுத்திய கார்களை வாங்க விரும்புகிறார்கள். நமது நாட்டில் பயன்படுத்திய கார்களின் சந்தை மிகப்பெரியதாக உள்ளது. ஒருவர் பயன்படுத்திய காரை வாங்கும்போதெல்லாம், அவர் பல ஆப்ஷன்களை பற்றி யோசிக்கிறார். பல இடங்களில் இதை பற்றி விசாரித்து, ஆராய்ந்து பின்னர் சரியான காரை வாங்க முயற்சிக்கிறார். நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைக்கின் விலையில் (சுமார் 70 ஆயிரம்) விற்கப்படும் சில பயன்படுத்தப்பட்ட கார்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 26 ஆகஸ்ட் 2022 அன்று மாருதி சுசுகியின் ட்ரூ வேல்யூ  இந்த கார்கள் காணப்பட்டன. இருப்பினும், இவை அனைத்து கார்களும் மிகவும் பழமையான கார்கள் என்பதும், இவற்றின் பதிவு காலம் (பெட்ரோலுக்கு 15 ஆண்டுகள்) முடிய குறுகிய காலமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த கார்களை இன்னும் ஓரிரு வருடங்கள் இயக்க முடியும்.


1.  Maruti Alto LX


மாருதி ஆல்டோ எல்எக்ஸ் கார் ஃபரிதாபாத்தில் கிடைக்கிறது. அதற்கு 65 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இது 2009 மாடல் கார் மற்றும் இதுவரை 192302 கிமீ ஓடியுள்ளது. காரில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது முதல் உரிமையாளர் கார். அதன் பதிவு எண் ஃபரிதாபாத்தினுடையது.


மேலும் படிக்க | Used Cars: நம்ப முடியாத விலையில் கார்களின் விற்பனை, விவரம் இதோ 


2.Maruti Wagon R LXI 


மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ காஜியாபாத்தில் கிடைக்கிறது. இதற்கும் 65 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இது 2008 மாடல் கார் ஆகும். இந்த கார் இதுவரை 88521 கிமீ ஓட்டியுள்ளது. காரில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதுவும் முதல் உரிமையாளர் கார். அதன் பதிவு எண் காஜியாபாத்தைச் சேர்ந்தது.


3. Maruti Alto LX 


சோனிபத்தில் மாருதி ஆல்டோ எல்எக்ஸ் கார் கிடைக்கிறது. அதற்கு 70 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இதுவும் 2008 மாடல் கார்தான். இந்த கார் இதுவரை 118641 கிமீ ஓட்டியுள்ளது. காரில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது இரண்டாவது உரிமையாளர் கார். அதன் பதிவு எண் சோனேபத்தினுடையது. 


4. Maruti Wagon R LXI 
குருகிராமில் மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ கார் கிடைக்கிறது. இதற்கும் 70 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இது 2007 மாடல் கார் ஆகும். இதுவரை இந்த கார் 146937 கிமீ ஓடியுள்ளது. காரில் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது மூன்றாவது உரிமையாளர் கார் ஆகும். அதன் எண் குருகிராமில் இருந்து பதிவாகியுள்ளது. 


(பயன்படுத்தப்பட்ட காரை வாங்க நாங்கள் யாரையும் பரிந்துரைக்கவில்லை. இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.)


மேலும் படிக்க | Second Hand Car வாங்கணுமா? இங்க ஈசியா கடன் கிடைக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ