உங்களின் மொபைல் கேமரா மற்றும் வெப் கேமரா உளவு பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் தனிநபர்களின் தகவல்களையும் அவர்களால் திருட முடியும். அதிர்ஷ்டவசமாக இதில் இருக்கக்கூடிய நல்ல செய்தி என்னவென்றால், அத்தகைய உளவுகளை உங்களால் தடுக்க முடியும் அல்லது உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேக்கரால் என்ன செய்ய முடியும்? 


உங்கள் மொபைல் போனை ஒருமுறை ஹேக் செய்துவிட்டால், எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களால் உங்களின் கேமராவை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும். மைக்ரோபோன் மூலம் உங்களின் உரையாடல்களை கேட்க முடியும். புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்யலாம். உங்கள் கேமரா ஆன் ஆகும்போதெல்லாம் செல்போனின் பின்புறம் அல்லது முன்புறத்தில் வித்தியாசமாக லைட் எரியும் அல்லது கேமராவின் செயல்பாடுகளைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | Mozilla Firefox பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அரசு!


ஹேக்கர்களை பொறுத்தவரை பொதுவாக தனிநபர்களை பொதுவாக குறிவைப்பதில்லை. பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளே அவர்களுடைய இலக்கு. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் குழந்தைகளை கண்காணிக்க பெற்றோர்கள் சில ஹேக்கிங் வழிமுறையை பின்பற்றுகின்றனர். 



நிறுவனங்களும் கண்காணிக்கும்


பெரிய நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை கண்காணிக்க ஹேக்கிங்கை பயன்படுத்துவார்கள். கேமரா மூலம் ஊழியர்களின் நடவடிக்கையை கண்காணிப்பாளர்கள். உதாரணமாக ஆஃபீஸில் இருக்கும் கணிணி லேப்டாப் வெப் கேமரா மூலம் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். அவர்கள் பணியில் முழு கவனம் செலுத்திகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள ஹேக்கிங்கை பயன்படுத்துகிறார்கள்.


கார்ட்னர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் மிகப்பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளில்  உள்ள முதலாளிகளில் 60 விழுக்காடுக்கும் மேலானோர் ஊழியர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள உளவு மென்பொருளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற விஷயங்கள் உங்களுக்கு கவலையளிப்பதாக நீங்கள் நினைத்தால், உங்களை உளவு பார்ப்பதை உங்களால் தடுக்க முடியும். 



என்ன செய்ய வேண்டும்? 


உதாரணமாக வெப் கேம் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், சிறிய அளவிலான மறைப்பானைக் கொண்டு கணிணியில் இருக்கும் வெப்கேமை மறைத்துவிடுங்கள். லேப்டாப் மற்றும் கணிணி பயன்படுத்தாமல் இருக்கும்போது ஸ்லீப் மோடில் வைக்க வேண்டாம். அத்தகைய நிலையிலும் உங்களை கண்காணிக்க முடியும் என்பதால் சிஸ்டம்களை ஆஃப் செய்துவிடுங்கள். 


சில செயலிகளுக்கு கேமராவின் அனுமதி தேவை இருக்காது. எனவே செட்டிங்ஸில் சென்று அத்தியாவசியமான செயலிகளைத் தவிர்த்து மற்ற செயலிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேமராக அணுகளை ஆஃப் செய்யுங்கள். இதேபோல் போனிலும் செய்ய வேண்டும். தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.  ஆன்டி வைரஸ் வைத்திருங்கள். அதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நிபுணரை நாடுவது நல்லது.


மேலும் படிக்க | ஹேக் செய்யப்பட்ட யுஜிசி ட்விட்டர் கணக்கு மீட்பு... 2 நாட்களில் 3 அரசு ட்விட்டர் கணக்குகள் முடக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR