புதுடில்லி: மனித வாழ்க்கை என்பது நம் பூமியில் மட்டுமே உள்ளதா? என்ற இந்த கேள்வி வேற்றுகிரகவாசிகள் (ALIENS) குறித்து நமது மனதில் தோன்றும் போதோ அல்லது அதைபற்றி தகவல் வரும் போதோ எழுகிறது. கடந்த பல நாட்களாக, விஞ்ஞானிகள் தொலைதூர இடத்திலிருந்து (வேற்றுகிரகம்) செய்திகளைப் பெறுகிறார்கள். இதன் அடிப்படையில் பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிர் இருப்பதாகத் தெரிகிறது எனக் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிற கிரகத்தில் இருந்து செய்திகள் வருகிறது:
கனடா நிறுவனத்தின் ஒரு விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து வரும் ஒரு சிறப்பு செய்தியை கண்டு பிடித்துள்ளனர். இதன சிறப்பு என்னவென்றால், இந்த செய்தி ஒவ்வொரு 16 நாட்களுக்கும் ஒருமுறை அனுப்பப்படுகிறது. இந்த செய்தி ரேடியோ சிக்னலாக வருகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அலை போல் வருகிறது. தகவல் தொடர்பு அறிவியலின் மொழியில் இவை ஃபாஸ்ட் ரேடியோ ப்ரஸ்ட் (FRB) என்று அழைக்கப்படுகின்றன. வானொலி அலைகளை போல வரும், இந்த செய்தியில் உள்ள விசியத்தை அறிந்துக்கொள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.


ஆரம்பத்தில், இந்த அறிகுறிகள் தொடர்ந்து வரவில்லை. ஆனால் பின்னர் அந்த அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் வரத் தொடங்கியது. இதை தொடர்ந்து கண்காணித்ததில், அவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அனுப்பப்படுகின்றன என்பது தெளிவாகி விட்டது எனக் கூறியுள்ளானர்.


டெல்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி எதிரொலி... காங்கிரஸ் கட்சிக்குள் விரிச்சல்...


கனடா விஞ்ஞானிகள் இந்த செய்தியை கண்டுப்பிடித்தனர்:
விண்வெளியில் இருந்து வரும் இந்த செய்திகளை கனடா ஹைட்ரஜன் இன்டென்சிட்டி மேப்பிங் பரிசோதனையில் (Canadian Hydrogen Intensity Mapping Experiment) ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கனடாவின் வானியற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த சோதனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு பட்டதாரி ஆராய்ச்சி மாணவரின் கவனம் தொலைதூர இடத்திலிருந்து வரும் சமிக்கை பக்கம் கவனம் சென்றது. இந்த வானொலி செய்திகள் ஒவ்வொரு 16 நாட்களுக்கும் ஒருமுறை வருவதை அந்த மாணவர் தான் முதலில் கண்டுபிடித்தார். இந்த செய்திகள் பூமிக்கு அனுப்பபடுகின்றன. இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்பதில் விஞ்ஞானிகள் ஏறக்குறைய ஒருமனதாகிவிட்டனர்.



வேற்றுகிரகவாசிகளின் ரேடியோ சிக்னல் எப்படி கண்டறியப்படுகிறது:
ஐரோப்பாவின் ஈ.வி.என் (EVN) தொலைநோக்கியின் தரவுகளும் கனடா விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு 2019 ஜூன் 19 அன்று அவற்றைக் கேட்டபின், விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையிலான அதிர்வுகளின் உதவியுடன் இந்த சமிக்கைகளைப் பதிவுசெய்து தரவைத் தயாரிக்கிறார்கள். இந்த முறையால், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வரும் ரேடியோ செய்திகளின் மேப்பிங் செய்யப்படுகிறது. இந்த சிறப்பு செய்திகள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வருகின்றன. அதை டிகோட் செய்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.


3வது திருமணத்திற்கு வந்து கணவனை வெளுத்து வாங்கிய முதல் மனைவி


நகரும் பொருளிலிருந்து வரும் செய்திகள்:
பூமியிலிருந்து சுமார் 500 மில்லியன் (சுமார் 50 கோடி) ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து இந்த சமிக்கை வருகிறது என்பதை அறிந்துக்கொண்டதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வானொலி செய்தியை விண்வெளியில் இருந்து 409 நாட்கள் விஞ்ஞானிகள் கண்காணித்தனர். இந்த அலைகள் விண்வெளியில் இருந்து ஒரு நான்கு நாட்கள் தொடர்ந்து மணி நேரமாக வருவதை அவர்கள் கண்டறிந்தனர். பின்னர் அது நின்றுவிடுகிறது. இதற்குப் பிறகு, 12 நாட்களுக்கு அமைதி நிலவுகிறது. இந்த செயல்முறை 12 நாட்களுக்குப் பிறகு தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு தொடர்கிறது.


சிறப்பு என்னவென்றால், இந்த அலைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகின்றன. அவை விண்வெளியில் சுற்றும் ஒரு கிரகம் அல்லது பறக்கும் தட்டுகளில் இருந்து வருகின்றன என்று தெரிகிறது.


இந்த தகவல்களின் அடிப்படையில் வைத்து பார்த்தால், பூமியைத் தவிர வேறு விண்வெளியில் உயிர் இருக்கிறது என்பது தெளிவாகிறது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.