புதுடெல்லி: மாருதி சுஸுகி தனது புதிய பிரெஸ்ஸா 2022 காருக்கான முன்பதிவுகளை 2022 30 ஜூன் அன்று தொடங்குவதற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவிப்ப்பு வெளியிட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது, ​​புதிய 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா செக்மென்ட் காரானது, முதல் ஹெட் அப் டிஸ்ப்ளேவைப் பெறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காரில் HUD மற்றும் 360 டிகிரி கேமராவும் உள்ளது.


சரவுண்ட் வியூ கேமரா அமைப்பு மாருதியின் பலேனோவில் அறிமுகமானது. இது, XL6 இல் மாதிரியுலும் இருக்கும். ஹெட் அப் டிஸ்ப்ளே (HUD) வேகம், RPM, எரிபொருளசிக்கனம், ஆற்றல் ஓட்டம் போன்ற முக்கியமான தகவல்களையும் மாருதி சுஸூகி வெளியிட்டுள்ளது.


இது, காரை ஓட்டுபவர்கள் சாலையில் இருந்து கண்களை எடுக்காமல் வாகனம் ஓட்ட அனுமதிக்கும். சிறந்த பயனர் இடைமுகத்திற்காக பல காட்சி விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது.


மேலும் படிக்க | ஜூன் 30 அறிமுகமாகும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா! விலை மற்றும் அம்சங்கள்


“தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த காராக, ஹெட் அப் டிஸ்ப்ளேயுடன் கூடிய ஆல்-நியூ ப்ரெஸ்ஸா, அதன் சிறப்பியல்பு ஆக்கிரமிப்பு வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் புத்துணர்ச்சியூட்டும், பாதுகாப்பான மற்றும் அதிவேகமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும். இந்த அம்சத்தின் மூலம், மாருதி சுஸுகி, வாகனத்தின் ஸ்போர்ட்டினஸ் மற்றும் அதன் வசீகரிக்கும் தோற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், பாதுகாப்பு மற்றும் வசதியை அதிகப்படுத்தும் ஒரு முழுமையான தீர்வை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது,” என்று நிறுவனம் குறிப்பிட்டது.


புதிய பிரெஸ்ஸா புதிய வடிவமைப்பு, நவீன மற்றும் விசாலமான கேபின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட நெக்ஸ்ட்-ஜென் பவர்ட்ரெய்னுடன் கிடைக்கும்.


"மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய சந்தையில் புதிய உத்வேகத்தை உருவாக்கியது. இந்த கார்,நாட்டில் சிறிய எஸ்யூவிகளின் புதிய போக்கைத் தொடங்கியுள்ளது. வெறும் 6 ஆண்டுகளில் 7.5L யூனிட்கள் விற்பனையாகி, நாட்டின் காம்பாக்ட் SUV பிரிவில் பிரெஸ்ஸா வலுவான சந்தைப் பங்கை பெற்றுள்ளது,” என்று மாருதி சுஸூகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | Scorpio N design: மஹிந்திரா ஸ்கார்பியோ N வீடியோ டிரெய்லர் டீசர் வெளியானது


மாருதி நிறுவனத்தின் அரீனா ஷோரூம் அல்லது அதன் இணையதளத்தில் புதிய ப்ரெஸ்ஸாவை ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். 2022 Baleno காரின் பல அம்சங்களை Maruti Suzuki Brezza ஏற்றுக்கொள்ளும். சப்-4m காம்பாக்ட் SUV ஆனது Baleno 2022 இலிருந்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது. ஸ்டீயரிங் வீலும் சற்று தட்டையான அடிப்பகுதியுடன் ஒரே மாதிரியாக இருப்பது போல் தெரிகிறது.


 Kia Sonet, Mahindra XUV300, Tata Nexon போன்றவற்றுடன் 2022 Maruti Suzuki Brezza போட்டிக்கு களம் இறங்குகிறது. புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


தற்போது மாருதி சுசுகி அதன் பெயரிலிருந்து 'விட்டாரா' என்ற முன்னிணைப்பு பெயரை கைவிட திட்டமிட்டுள்ளது, அதாவது இப்போது, மாருதி பிரெஸ்ஸா என்று அது அழைக்கப்படும். 


மேலும் படிக்க | இந்தியாவில் ரூ 59.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது KIA EV6


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR