புதுடெல்லி: வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து மத்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. புதிய கொள்கையை திரும்பப் பெறுமாறு கேட்டு வாட்ஸ்அப் நிர்வாகத்திற்கு அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பயனர்களுக்கான புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை திரும்பப் பெறுமாறு கேட்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology), வாட்ஸ்அப்பின் தலைமை (Whatsapp) நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி வில் கேத்தார்ட்டுக்கு அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. பயனர்களின் தகவல் பாதுகாப்பு குறித்து அமைச்சகம் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சாட் (Chat) தரவை (Data) வணிகக் கணக்கில் பகிர்ந்து கொள்வதன் மூலம், பேஸ்புக்கின் (Facebook) பிற நிறுவனங்கள் பயனர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறும் என்று கூறினார். இது அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்றும் கூறினார்.


ALSO EAD | WhatsApp-ன் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வேறு செயலியைப் பயன்படுத்துங்கள்: HC


அமைச்சின் கூற்றுப்படி, வாட்ஸ்அப் புதிய கொள்கையை 'Agree or leave' கொள்கையின் கீழ் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது. நுகர்வோருக்கு மறுக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றத்தின் 2017 தீர்ப்பில் தனியுரிமை (privacy policy) விதிகள் குறித்து வாட்ஸ்அப்பை அரசாங்கம் அறிந்திருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா விவாதத்தில் இருக்கும் நேரத்தில், வாட்ஸ்அப் இந்தக் கொள்கையை ஏன் கொண்டு வந்தது? இந்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவில் பரிசீலனையில் உள்ளது. தரவிற்கான பயன்பாட்டு வரம்புக்கு ஒரு ஏற்பாடு உள்ளது. அதாவது, பயனரின் தரவு எடுக்கப்படும் வேலையை மட்டுமே நிறுவனம் பயன்படுத்த முடியும். இதற்காக, பயனர் சம்மதமும் தேவை.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR