செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி!
இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு 33 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு 33 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
விண்வெளிலிருந்தும், விண்கற்கள் உள்ளிட்ட மற்ற அபாயங்களிலிருந்தும் இந்திய செயற்கைக் கோள்கைகளை காப்பாற்ற நேத்ரா என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. இதை 400 கோடி ரூபாயில் இஸ்ரோ செயல்படுத்துகிறது. இதற்காக மானியம் வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றார்.
இந்நிலையில் தற்போது இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு 33 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விண்வெளி ஆராய்ச்சிகளின் விளைவாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பழைய செயற்கைக்கோளின் பாகங்கள் உள்ளிட்ட குப்பைகள் அதிக அளவில் உருவாகியிருப்பதால், மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த திட்டத்தை அமைத்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.