பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘குயின் பெல்ட்’...
முதன்முறையாக, சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அடங்கிய குழு, கொடூரமான குற்றங்களுக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்கும் முயற்சியில் “குயின் பெல்ட்” என்று அழைக்கப்படும் ஒரு பெல்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
முதன்முறையாக, சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அடங்கிய குழு, கொடூரமான குற்றங்களுக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்கும் முயற்சியில் “குயின் பெல்ட்” என்று அழைக்கப்படும் ஒரு பெல்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பெல்ட்டில் எலக்ட்ரானிக் சர்க்யூட் பொருத்தப்பட்டுள்ளது, இதில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) மற்றும் மொபைல் சிம் கார்டு இடம்பெற்றுள்ளது. இந்த பெல்ட்டுகளை அணிவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம் என கண்டுபிடிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பெல்டிற்கு உரிமை இல்லா நபர்கள் யாராவது அதை கட்டாயமாக திறக்க முயற்சித்தால், உள் புகுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தானாகவே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஒரு எச்சரிப்பு செய்தியை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளனர். பெல்ட்டில் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சுமார் ஒரு மாத காலத்திற்கா சேமிப்பு திறனை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் பெல்ட்டைக் கண்டுபிடித்த மாணவர்களில் ஒருவரான ஜவ்தேஷ் சிங், இந்த சாதனத்தின் காப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும், அதன் வணிக விற்பனையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“குயின் பெல்ட் ஒரு ஸ்மார்ட் பாதுகாப்பு பெல்ட் ஆகும், இது பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு வழக்குகளை தானாகவே கண்டறியும். பெல்ட் உடனடியாக பெண்ணின் குடும்பம் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு தெரிவிக்கிறது. எங்களுக்கு பெல்ட்டில் காப்புரிமையும் கிடைத்துள்ளது. நாங்கள் தற்போது வணிக ரீதியிலான ஒரு பெல்ட்டிலும் பணியாற்றி வருகிறோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பெல்ட்டின் செயல்பாட்டு பொறிமுறையை விளக்கிய சிங், அவசரகால தொடர்பு பாதிக்கப்பட்டவரின் இருப்பிடத்தையும் GPS கண்காணிப்பு அமைப்பு வழியாகப் பெறுகிறது, இது மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு மாணவர் ஆஞ்சால் இது குறித்து தெரிவிக்கையில், இந்த பெல்ட் ஆனது இரவு தாமதமாக பயணம் செய்யும் பெண்களுக்கு உதவும் என்று கூறினார்.
“யாராவது பெல்ட்டை வலுக்கட்டாயமாக வெட்ட முயற்சிக்கும்போது, ஒரு குறுஞ்செய்தி தானாகவே அவசர தொடர்புகளுக்கு அனுப்பப்படும். இது கற்பழிப்பு வழக்குகளை குறைக்க உதவும்,” என்று அவர் கூறினார்.