சந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்!!
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!!
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!!
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க முற்பட்டபோது, 2 கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசிப் பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படாததால் தொடர்பை இழந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து, அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நேற்று கூறினார். நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சிவன் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது. ஆர்பிட்டர் லேண்டரின் வெப்பப் படத்தைக் கிளிக் செய்துள்ளது. ஆனால் இதுவரை தகவல் தொடர்பு இல்லை. நாங்கள் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செங்குத்தான நிலையில் லேண்டர் விழுந்திருந்தால் ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.