பெங்களூரு பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகங்களுக்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழகம் கல்லூரிகளில் AI சாட்ஜிபிடி-ஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. OpenAI-அடிப்படையிலான ChatGPT-ஐ ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பயன்படுத்த முடியாது. எழுதுவதற்கும், கற்பிப்பதற்கும் சாட்போட்டைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் ChatGPT-ஐப் பயன்படுத்தினால், அவர்களுக்குத் திருட்டு குற்றங்களுக்கு சமமான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்


ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் சென்றுள்ளது. அதில், வகுப்பு, பணிகள் மற்றும் மதிப்பீடுகளில் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஆசிரியரின் அனுமதி பெறாமல் அதைப் பயன்படுத்தினால், அது ஏமாற்று அல்லது திருட்டு என்று கருதப்படும். அதாவது, ChatGPT-ஐப் பயன்படுத்தி, தங்கள் பணிகளை விரைவாக முடிக்கக்கூடிய மாணவர்கள் இந்த தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.


"வகுப்பு, பணிகள் மற்றும் பிற மதிப்பீடுகளில் ChatGPT அல்லது பிற AI கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர் அதைப் பயன்படுத்தும்போது பாட ஆசிரியரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறவில்லை என்றால், அது மற்றவர்களின் வேலையை ஏமாற்றுவதாகக் கருதப்படும். இது வெறுமனே கருத்துத் திருட்டு என்று கருதப்படும் என்று அர்த்தம்," என்று ஹாங்காங் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.


மேலும், ஒரு மாணவர் தனது பள்ளிப் பணிகளை முடிக்க ChatGPT போன்ற கருவியைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்பட்டால், ஆசிரியர் அவர்களின் வேலையைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு அல்லது அவர்களின் அறிவைச் சோதிக்க வாய்வழித் தேர்வை மேற்கொள்ளும்படி கேட்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மாணவர்கள் சாட்ஜிபிடி உபயோகத்தை கல்லூரி நிர்வாகத்துக்கு எடுத்துக் கூறி உள்ளனர். ஆனால், தடையை அறிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளது. காலப்போக்கில் மாணவிகளின் கற்றலில் AI கருவிகளை எவ்வாறு இணைப்பது என்பதை ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இந்தியாவில், பெங்களூரில் உள்ள RV பல்கலைக்கழகம் கல்லூரிகளில் ChatGPT-ஐ தடை செய்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, பல்கலைக்கழகம் ChatGPT-ஐ மட்டும் தடை செய்யவில்லை. GitHub கோ-பைலட் மற்றும் பிளாக் பாக்ஸ் போன்ற பிற AI அடிப்படையிலான கருவிகளையும் தடை செய்துள்ளது. "பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் நாங்கள் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளோம். ChatGPT போன்ற சில AI கருவிகளை மாணவர்கள் தேர்வுகளில் அல்லது தங்கள் பணிகளை முடிக்க அவற்றைப் பயன்படுத்தக்கூடும் என்பதால் தடை செய்துள்ளோம். தடை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது,” என பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் இருப்பவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ChatGPT-க்கு தடைபோட்ட சீனா! அமெரிக்கா மீது குற்றச்சாட்டு


மேலும் படிக்க | சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்


மேலும் படிக்க | பிரதமர் மோடி இருக்காரே... சட்டென சொன்ன ChatGPT - சர்ச்சை லிஸ்ட் பெரிசா போகுது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ