ChatGPT: சாட்ஜிபிடிக்கு தடை விதித்தது சீனா! அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

ChatGPT-க்கு சீனாவில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம் சீனாவைப் பற்றி தவறான தகவல்களை கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சாட்ஜிபிடிக்கு போட்டியாக இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2023, 05:17 PM IST
ChatGPT: சாட்ஜிபிடிக்கு தடை விதித்தது சீனா! அமெரிக்கா மீது குற்றச்சாட்டு title=

ChatGPT உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஏஐ தொழில்நுட்பம். இதற்கு சீனா தடை விதித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சாட்ஜிபிடி, சீனாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், இது சீன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் ChatGPT சேவைகளை எந்த வகையிலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, சீனாவில் ChatGPT-யை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ நாட்டில் வழங்கக்கூடாது என்று கட்டுப்பாட்டாளர்கள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற இணைய தளங்களைப் போலவே, ChatGPT-யும் சீனாவின் ஃபயர்வால் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்

சீனாவில் முன்பு ChatGPT-ன் சேவைகள் சில பயனர்களுக்கு WeChat-ல் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் கிடைத்தன. ஆனால் இப்போது Tencent அதையும் நீக்கியுள்ளது. இதுமட்டுமின்றி, சாட்பாட் சேவைகளை தடை செய்வது மட்டுமின்றி, இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மற்றொரு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தனது சொந்த சாட்போட் அல்லது AI அடிப்படையிலான எந்தவொரு சேவையையும் தொடங்கப் போகிறது என்றால், அதற்கு முன் நிறுவனம் அதற்கு அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது பிரச்சாரத்தை பரப்புவதற்கு ChatGPT உதவுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.  மேலும் அமெரிக்க அரசு தனது சொந்த நலன்களுக்காக AI சாட்போட் சேவையைப் பயன்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது. ChatGPT சமீபத்தில் சர்ச்சைக்குரிய நபர்களின் பட்டியலை உருவாக்கியது. எலோன் மஸ்க், விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலகப் பிரபலங்களையும் AI சாட்போட் சர்ச்சைக்குரிய நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இது இப்போது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு தடை போட்ட மற்றொரு பல்கலைக்கழகம்..! சுவாரஸ்ய பின்னணி

மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்

மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News