Chat GPT: சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்
Chat GPT Employees: சாட்ஜிபிடி நிறுவனம் கூகுளில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை வேலைக்கு சேர்த்துள்ளது. இதன் மூலம் ஓபன் ஏஐ தொழில்நுட்ப ரீதியாக இன்னும் அசுர வளர்ச்சியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபன் ஏஐ-ன் சாட்ஜிபிடி உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக மாறிவிட்டது. எந்தவொரு வேலையையும் நொடியில் செய்து கொடுக்கக்கூடிய அம்சத்தை கொண்டிருக்கும் சாட்ஜிபிடி, உலகில் அதிகம் பயன்படுத்தும் இணையதளமான கூகுளுக்கு போட்டியாக உருமாறி நிற்கிறது. இதனால் செம ஷாக்கில் இருக்கும் கூகுள் உடனடியாக விழித்துக் கொண்டு சாட்ஜிபிடிக்கு போட்டியாக ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கூகுள் பார்டு என பெயரிட்டிருக்கும் ஏஐ தொழில்நுட்பத்தினை மேம்படுத்த சுமார் 400 மில்லியன் அமெரிக்கன் டாலரை இறக்கியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் படிக்க | ChatGPT-க்கு தடைபோட்ட சீனா! அமெரிக்கா மீது குற்றச்சாட்டு
இருந்தாலும் கூகுளுக்கு முன்பே களத்தில் இறங்கவிட்ட சாட்ஜிபிடி அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி அசுரவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்போது இலவசமாக இதனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தாலும் வரும் நாட்களில் கட்டணம் நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளது சாட்ஜிபிடி.
இதில் சில குறைபாடுகள் இன்னும் இருக்க தான் செய்கிறது. வினோதமாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாட்ஜிபிடி அளிக்கும் பதில் வேடிக்கையாக இருப்பதால், அதுவே அதற்கு பாதகமானதாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சில நாடுகள் மற்றும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு அசாதாரணமான பதில்களை வழங்கி வருகிறது. இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் சாட்ஜிபிடி இருப்பதால், புதிய நபர்களை அதுவும் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களை நியமிக்க முடிவு செய்தது.
அதன்படி கூகுளின் முன்னாள் ஊழியர்களையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களையும் பணிக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறது சாட்ஜிபிடி. இப்போதைய சூழலில் ஓபன்ஏஐ குழுவில் 59 முன்னாள் கூகுள் ஊழியர்களும், 34 பழைய மெட்டா ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர ஆப்பிள் மற்றும் அமேசான் ஊழியர்களும் ஓபன்ஏஐ-ல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனராம். தலைமைக் குழுவில் சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களாக இவர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம் சிறப்பாகச் சேர்த்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மைக்ரோசாப்டுடன் கூட்டு சேர்ந்தது. முதலில் எலோன் மஸ்கும் ஓபன் ஏஐ உருவாக்கத்தில் இருந்தார். ஆனால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அந்த குழுவில் இருந்து 2018 ஆம் ஆண்டு விலகிக் கொண்டார்.
மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்
மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ