மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்
தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லின் சில மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வேஒடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, தற்போது தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லின் சில மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி (Airtel Prepaid Plans) வருகிறது. அதே நேரத்தில், நீங்கள் இலவச OTT சேனல் அணுகலையும் விரும்பும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு, ஏர்டெல் சில சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர் அதிகம் விரும்பும் ஏர்டெல்லின் மூன்று சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். இந்த திட்டங்களில், தினசரி 2ஜிபி முதல் 3ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதோடு, இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், 22 க்கும் மேற்பட்ட OTT சேனல்களுக்கு நிறுவனம் இலவச அணுகலையும் வழங்குகிறது. ஏர்டெல்லின் இந்த திட்டங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஏர்டெல்லின் ரூ.409 ப்ரீப்ய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.409 ப்ரீப்ய்ட் திட்டத்தில், இணைய பயன்பாட்டிற்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். நிறுவனத்தின் 5G இணைப்பு பகுதியில் வசிக்கும் பயனர்கள் வரம்பற்ற 5G தரவையும் பெறுவார்கள். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது. தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியத்துடன் வருகிறது. இதில், நீங்கள் 22 க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீப்ய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.449 ப்ரீப்ய்ட் திட்டத்தில், இணைய பயன்பாட்டிற்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில், ஏர்டெல்லின் 5ஜி இணைப்பு உள்ள பகுதியில் வசிக்கும் பயனர்களுக்கு, வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டதில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியும் உண்டு. இதில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்தின் இலவச சந்தா கிடைக்கும். இதன் மூலம் 22 க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான இலவச அணுகலை பெறலாம்.
ஏர்டெல்லின் ரூ.979 ப்ரீப்ய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில், இணைய பயன்பாட்டிற்கு தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நிறுவனத்தின் 5G இணைப்பு உள்ள பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர் என்றால், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பு வசதியையும் நிறுவனம் வழங்குகிறது. மற்ற திட்டங்களைப் போலவே, இதிலும் நீங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியத்தின் இலவச சந்தா கிடைக்கும். இதில் 22 க்கும் மேற்பட்ட OTT செயலிகளுக்கான அணுகலுடன் வருகிறது.
மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ