Itel தனது ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவை மற்றொரு புதிய வெளியீட்டுடன் வலுப்படுத்த தயாராக உள்ளது. ஆதாரங்களின்படி, நிறுவனம் பிப்ரவரி 1 ஆம் தேதி அமேசான் (Amazon) இல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் லுக் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும். ரெண்டர் படங்களின்படி, ஏ சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் உள்ள Itel-ன் இந்த புதிய சாதனம் ஒரு பெரிய டிவைசாகவும் இரட்டை பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும். இந்த ஃபோனில் கவர்ட் டிஸ்பிளேவுடன் கூடிய 5.5 அங்குல பெரிய திரை இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபோனில் இரட்டை பாதுகாப்பு அம்சத்துடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்டெல் ஸ்டோரேஜ் ஆகியவை இருக்கும். அதாவது, வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு இந்த ஸ்மார்ட்ஃபோனை (Smartphone) மிகச்சிறந்த அம்சங்களுடன் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஃபோன் ரூ .6,000 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


7000 ரூபாய்க்கு பட்ஜெட் ஃபோன்


சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது முதன்மை Itel Vision 1 PRO மூலம், ரூ .7,000 பிரிவில் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக மாற Itel முயற்சிக்கிறது. இதில பல பிரீமியம் அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பிரிவில் உள்ள மிகச்சிறந்த தொலைபேசிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. Itel-இன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நிறுவனம் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை (Technology) மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டயர்-3 இன் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.


ALSO READ: முடக்கபட்ட BSNL எண்ணை ஆக்டிவேட் செய்வது எப்படி? - இதோ முழு விவரம்!


itel Vision 1 PRO


2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான சமீபத்திய கவுண்டர் பாயிண்ட் ஆய்வின் படி, Itel அதன் முதன்மை விஷன் தொடரில் Vision 1 ஐ அறிமுகப்படுத்தி டயர்-3, டயர்-4 நகரங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் மலிவு விலையில், புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


9 சதவீத சந்தை பங்கு


கவுண்டர் பாயிண்ட் ஆய்வின் படி, இந்தியாவில் (India) அதன் சந்தைப் பங்கைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டில் அதன் சந்தைப் பங்கு 6% முதல் 9% ஆக உயர்ந்துள்ளது.


மேலும் இது இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல் ஃபோன் துறையில் முதல் 5 நிறுவனங்களில் இடத்தைப் பெற்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில், ITEL தனது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எந்தெந்த புதிய அம்சங்கள் கொண்ட ஃபோன்களை கொண்டு வரும் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.


ALSO READ: OnePlus Band, Mi Smart Band 5 மற்றும் Samsung Galaxy Fit 2 இல் எது வலுவானது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR