பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதன்கிழமை ரூ.797-க்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பழைய பிஎஸ்என்எல் எண்ணை இரண்டாம் நிலை சாதனமாக செயலில் வைத்திருக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான வவுச்சர் திட்டமாகும் இது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் பலவிதமான வவுச்சர் திட்டங்களை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் செகண்டரி ஃபோன் எண்களை செயலில் வைத்துக்கொள்ள இந்த திட்டங்களை வாங்குகிறார்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் ஆன்லைனில் திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


பிஎஸ்என்எல் ரூ.797 திட்ட விவரங்கள்


பிஎஸ்என்எல்-இன் ரூ.797 திட்டம் 395 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல், கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜூன் 12, 20220-க்குள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் மட்டுமே பயனர்கள் கூடுதல் செல்லுபடியைப் பெற முடியும். 


மேலும் படிக்க | Excitel வழங்கும் பிரமாண்டமான திட்டங்கள்; தினறும் Jio-Airtel-BSNL 


வாடிக்கையாளர்கள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 60-ஆவது நாளுக்குப் பிறகு, ஃபோன் கால் செய்ய அல்லது இணையத்தில் பிரவுஸ் செய்ய பயனர்கள் டாக்டைம் அல்லது டேட்டா திட்டங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.


இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பொறுத்தவரை, பிஎஸ்என்எல்-இன் ரூ.797 திட்டமானது முதல் 60 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 60 ஆவது நாளுக்குப் பிறகு, தரவு வேகம் 80 Kbps ஆக குறைகிறது. 


முன்பே குறிப்பிட்டபடி, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டேட்டா மற்றும் அழைப்புப் பலன்கள் 60 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும். ஆனால் சிம் செயலில் இருக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் டேட்டா வவுச்சர் ஏற்கனவே ஏர்டெல் இணையதளத்திலும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா 50 காசுகளில் 60 நாட்களுக்கு வழங்கப்படும்.


பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவை வெளியீடு


இந்தியாவின் சுதந்திர தினத்தின் 75வது ஆண்டான ஆகஸ்ட் 15, 2022 அன்று, ஸ்டேண்ட்அலோன்  அல்லாத  (NSA) முறையில், வணிகரீதியான 4ஜி சேவை மற்றும் அதன் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (C-DOT) செயல் இயக்குநரும் தலைவருமான ராஜ்குமார் உபாத்யாய், சமீபத்தில் ஒரு தொழில்துறை நிகழ்வின் போது பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கிற்கான ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் (PoC) மற்றும் 5ஜி சோதனையை ஒன்றாகச் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | BSNL: ஜியோ, ஏர்டெல்லை அதிர வைக்கும் திட்டம், ரூ. 200-க்கு கீழ் எக்கச்சக்க பலன்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR