அசத்தலான மலிவான ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது 5ஜி நெட்வொர்க்கை இந்திய சந்தையில் மிக அதிகமாக விரிவுபடுத்துகிறது. இருப்பினும், சந்தையில் 5G வந்த போதிலும், இதுபோன்ற பல பயனர்கள் உள்ளனர், அவர்கள் 4ஜி சேவையை தான் இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சிலருக்கோ 1ஜிபி அல்லது 1ஜிபிக்கு மேல் தினசரி டேட்டா இருந்தால் போதும். அப்படிப்பட்டவர்களுக்கு ஜியோ நிறுவனத்தின் மலிவான ரீசார்ஜ் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ஜியோவின் மலிவான தினசரி திட்டங்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம், அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

149 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்:
ஜியோ நிறுவனத்தின் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டம் (Cheap Recharge Plans) இதுவாகும். இதன் மொத்த வேலிடிட்டி காலம் 20 நாட்கள் ஆகும். மேலும் இதில், தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும், அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு தவிர, 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இதில் அடங்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளை அணுகுவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | ஹானர் 90 5G மொபைல்: 200MP அல்ட்ரா-க்ளியர் கேமரா - இன்று வாங்கினால் ரூ.5000 உடனடி தள்ளுபடி


179 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்:
நிறுவனத்தின் இந்த ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Recharge Plans) செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். அதேபோல் இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.


209 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்:
28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது மற்றும் சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுகிறார்கள்.


199 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்:
தினமும் 1.5 ஜிபி டேட்டாவை நீங்கள் விரும்பினால், 199 ரூபாய் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 23 நாட்கள் ஆகும். இதில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 SMS ஐப் பெறுவீர்கள். இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அப் ஆகியவற்றையும் பெறுவீர்கள்.


239 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம்: 
இந்த 239 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் (JNio Recharge) வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 1.5 ஜிபி டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு தவிர, ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்தத் திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அப் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்கு ஸ்மார்ட்போன் வாங்கினா இவ்வளவு தள்ளுபடியா? விவோவின் தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ