Airtel அட்டகாசம்: மிகக்குறைந்த விலையில் எக்கச்சக்க நன்மைகள், ஏராளமான தரவு
84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஏர்டெல் திட்டத்தின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், இந்த முறை ஏர்டெல் தனது 84-நாள் செல்லுபடி திட்டத்தை குறைவான விலையில் வழங்குகிறது.
Airtel New Prepaid Plan: ஏர்டெல் அவ்வப்போது பல புதிய மலிவான மற்றும் விலையுயர்ந்த திட்டங்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் நன்மைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களை வாங்குகிறார்கள்.
பல நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபகரமாக இருக்கும் வகையில் மிக மலிவான திட்டங்களை (Recharge Plans) ஏர்டெல் வழங்குகிறது. ஆனால், பெரும்பாலும் அவற்றின் செல்லுபடியாகும் நாட்களுக்கான அளவு வெரும் 28 நாட்களாக மட்டுமே இருக்கிறது. இந்த பதிவில் ஏர்டெல்லின் மிக மலிவான மற்றும் லாபகரமான ரூ. 400 திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தில் குறைந்த விலையில் உங்களுக்கு 84 நாட்களுக்கான செல்லுபடி காலம் கிடைப்பதோடு பல கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.
84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஏர்டெல் திட்டத்தின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், இந்த முறை ஏர்டெல் தனது 84-நாள் செல்லுபடி திட்டத்தை குறைவான விலையில் வழங்குகிறது. நீண்ட கால செல்லுபடி கொண்டுள்ள இந்த லாபகரமான திட்டத்தில் என்ன நன்மைகள் உள்ளன என்று காணலாம்.
ALSO READ: Airtel Black: ஏர்டெலின் இந்த ரீச்சார்ஜில் கிடைக்கும் பல நன்மைகள்
ஏர்டெல்லின் (Airtel) இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 379 மட்டுமே. இந்த திட்டம் குறைந்த விலையில் 84 நாட்கள் வரை செல்லுபடியை அளிக்கின்றது. அதாவது, ரூ .400 க்கும் குறைவான ரீசார்ஜில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, அடுத்த ரீசார்ஜ் பற்றிய பதற்றம் உங்களுக்கு இருக்காது.
இதன் நன்மைகள் பற்றி பேசினால், இதில் வரம்பற்ற குரல் அழைப்பு (Unlimited Voice Calling) வசதி உள்ளது. அதாவது, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்கிலும் 84 நாட்களுக்கு இலவசமாகப் பேசலாம்.
நிறுவனத்தின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 6 ஜிபி அதிவேக தரவுத் திட்டங்களைப் பெறுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் 900 இலவச எஸ்எம்எஸ்-க்கான வசதியையும் பெறலாம். இசை ஆர்வலர்கள் இந்த திட்டத்தில் Wynk Music மற்றும் Free Hellotunes போன்ற நன்மைகளையும் பெறுவார்கள்.
FASTag வாங்குவதற்கான வாய்ப்பும் இருக்கும்
ரூ. 379 ப்ரீபெய்ட் திட்டத்தில், FASTag வாங்கும் போது வாடிக்கையாளர் ரூ .100 கேஷ்பேக் பெறுவார்கள். 6 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு ஆகிய நன்மைகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த திட்டம் வீட்டு முதியவர்கள் மற்றும் முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். 84 நாட்களுக்கு இலவசமாக வரம்பற்ற அழைப்பு மற்றும் 6 ஜிபி தரவு பயன்பாட்டைப் பெறுவதற்கான அற்புதமான திட்டமாக இது கருதப்படுகின்றது.
ALSO READ: ஜியோவுக்கு போட்டியாக, ஏர்டெல் அறிவித்துள்ள அசத்தல் திட்டங்கள்; முழு விபரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR