Blaupunkt இந்தியாவில் அதன் மிகவும் மலிவு விலை 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Blaupunkt Sigma 40-Inch ஆகும். பல வித அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவி -க்காக வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டுடன் சேர்ந்து Blaupunkt நிறுவனம் இந்த ஸ்மார்ட் டிவி -ஐ அறிமுகம் செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Blaupunkt நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மே 4 முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days Sale) போது கிடைக்கும். இந்த 40 இன்ச் டிவியில் இரண்டு 40 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம் கிடைக்கிறது. நிறுவனம் பிளிப்கார்ட் விற்பனையின் போது டிவிக்களுக்கு தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. Blaupunkt Sigma 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


Blaupunkt Sigma 40-Inch Smart Android TV: இந்தியாவில் இதன் விலை என்ன


Blaupunkt Sigma 40-inch ஸ்மார்ட் டிவி மே 4 முதல் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு வாங்க கிடைக்கும். நிறுவனம் இந்த டிவியின் விலையை ரூ. 13,499 என நிர்ணயித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 40 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளில் மிக மலிவான டிவி- ஆக இருக்கும். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! ஸ்மார்ட்போன் பேட்டரியை 100% சார்ஜ் செய்யக்கூடாது!


Blaupunkt Sigma 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விவரக்குறிப்புகள்


Blaupunkt Sigma 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி -யில் ஏர் ஸ்லிம் ப்ரொஃபைல் பேஸல் லேஸ் டிஸ்ப்ளே கிடைக்கும். இது HD தெளிவுத்திறனுடன் 60Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இதன் ஸ்க்ரீனில் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் கிடைக்கிறது. ஆடியோ வெளியீடு Dolby Digital Plus மற்றும் DTS TrueSurround தொழில்நுட்பத்தால் டியூன் செய்யப்பட்டுள்ளது.


டிவி மாலி ஜி31 ஜிபியு உடன் அம்லாஜிக் குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி சேமிப்பு சிப்செட் உள்ளது. இதில் கூகுள் அசிஸ்டண்ட், உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் மற்றும் பிற பயன்பாடுகளை பதிவிறக்க ப்ளே ஸ்டோர் உள்ளது. அமேசான் வீடியோ, ஜீ5, சோனி எல்ஐவி மற்றும் வூட் ஆகியவற்றிற்கான பிரத்யேக விசைகளைக் கொண்ட ரிமோட் கண்ட்ரோலை டிவி கொண்டுள்ளது. இந்த டிவி மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், RF உள்ளீடு, புளூடூத் மற்றும் Wi-Fi ஆகியவற்றை வழங்குகிறது.


பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை


ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் விரைவில் அதன் பிரபலமான பிக் சேவிங் டேஸ் விற்பனை (Big Saving Days Sale) மூலம் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்கவுள்ளது. இந்த விற்பனை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடைபெறும். பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு சேல் மே 4 முதல் தொடங்கிவிடும். ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் கேட்ஜெட்டுகள் வரை இந்த விற்பனையில் அற்புதமான பல சலுகைகள் கிடைக்கும்.


பிளிப்கார்ட்டின் அட்டகாசமான சேல்


விற்பனைக்கு முன், பிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. அதன்படி, ஐபோன் 13 மற்றும் சாம்சங் எஸ்21 ஃப்ஈ 5ஜி (Samsung S21 FE 5G) ஆகியவற்றை இந்த சேலில் மிக குறைந்த விலையில் வாங்க முடியும். 


மேலும் படிக்க | Chatgpt: GPT4-ல் இருக்கும் வியத்தகு அம்சங்கள்: யூடியூபர்களுக்கு ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ