தொலைதொடர்பு சேவையில் தற்போது இந்தியா  4G, அதாவது நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.  தற்போது 4G தொழில் நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பத்தை உலகின் 61 நாடுகள் பயன்படுத்தி வருவதாக, GSM அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், உலகின் மிக விரைவான  தொலைத் தொடர்பு சேவையான 5ஜி  தொழில்நுட்பத்தை இந்தியாவில்  சோதனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  5G தொழில்நுட்ப சேவைக்கு  MTNL, AIRTEL, JIO, VI ,  உள்ளிட்ட நிறுவனங்களுக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


ஆனால், இந்தியாவில் 5ஜி தொழில்நுப்ட சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சீன அரசு ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.


ALSO READ | 5G இணைப்பை துரிதப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மோடி அரசாங்கம்: முழு விவரம் உள்ளே


பின்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்த, தில்லியில் இருக்கும் சீன தூதரக செய்தி தொடர்பாளர் வாங் ஜியோஜியான், இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வழங்குவதில், சிறந்து விளங்கும் சீன நிறுவனங்களுக்கு,  தொழில்நுட்பப் பரிசோதனையில் அனுமதி அளிக்கப்படவில்லை. சீன நிறுவனங்களுகக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஏமாற்றத்தையும், அதிருப்தியையும், அளிக்கிறது என்று கூறினார்.


இந்தியாவில் விரைவில் அறிமுகமாகப்போகும் 5ஜி தொழில்நுட்பம்  எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும் என்கின்றனர் வல்லுநர்கள். குறிப்பாக ஆகுமென்ட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி போன்றவற்றில் 5ஜி தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது என கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் திரைப்படங்கள், இணைய விளையாட்டு, பொழுதுபோக்கு செயலிகள்,  போன்றவற்றில் 5ஜி பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.


5G தொழில்நுட்ப சோதனை 6 மாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த பரிசோதனை சென்னை , மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது,  சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும்  மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் 5G சேவையை பெறுவது உறுதி என கூறலாம்.


ALSO READ | 3D printed house: 5 நாட்களில் வீடு கட்ட முடியுமா; ஆம் என்கிறது Tvasta கட்டுமான நிறுவனம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR