3D printed house: 5 நாட்களில் வீடு கட்ட முடியுமா; ஆம் என்கிறது Tvasta கட்டுமான நிறுவனம்

முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் 3-டி பிரிண்டர் தொழில்நிட்பம் மூலம், 600 சதுர அடி கொண்ட இந்த வீடு ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2021, 08:48 AM IST
  • 3-டி பிரிண்டர் தொழில்நிட்பம் மூலம், 600 சதுர அடி கொண்ட இந்த வீடு ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வீடு, வழக்கமாக கட்டப்படும் வீட்டை விட 30 ஆண்டுகள் அதிகமாக நீடித்து நிற்கக் கூடியது.
  • அதோடு இதற்கான செலவும் மிக மிகக் குறைவு.
3D printed house: 5 நாட்களில் வீடு கட்ட முடியுமா; ஆம் என்கிறது Tvasta கட்டுமான நிறுவனம் title=

3D பிரிண்ட் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம்  மூலம் 600 சதுர அடி பரப்பளவிலான வீட்டை ஐஐடி சென்னை வளாகத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) திறந்து வைத்தார். 

முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் 3-டி பிரிண்டர் தொழில்நிட்பம் மூலம், 600 சதுர அடி கொண்ட இந்த வீடு ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதோடு, இது நீண்ட காலம் உறுதியாக நிற்கும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த வீடு, வழக்கமாக கட்டப்படும் வீட்டை விட 30 ஆண்டுகள் அதிகமாக நீடித்து நிற்கக் கூடியது என்கின்றனர், இந்த வீட்டை உருவாக்கியுள்ள வல்லுநர்கள். அதோடு இதற்கான  செலவும் மிக மிகக் குறைவு. 

2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் வீடு என்ற திட்டத்தின் கீழ், 10 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில். அந்த இலக்கை எட்ட இந்த 3டி பிரிண்ட் என்னும் நவீன தொழில்நுட்பம் அதற்கு நிச்சயம் உதவும் என அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ALSO READ | வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்கள்

 

த்வாஸ்டா (Tvasta)  மேற்கொண்ட பணிகள் குறித்து கருத்து தெரிவித்த, ஐ.ஐ.டி சென்னை, இயக்குநர் மற்றும் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, "இந்த தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில், மிக சிறந்த முன்னோடித் திட்டமாக பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்றார். விவசாயிகளுக்கு போர்வெல்களை வாடகைக்கு கொடுப்பதைப் போல, இந்த வீட்டைக் கட்டும் இயந்திரத்தை  வாடகைக்கு விடலாம். இதன் உதவியுடன், குறைந்த செலவில், நீடித்து நிற்கக் கூடிய வகையில், சில நாட்களில் கட்டி முடிக்கலாம் என்றார். 

இந்தியர்கள் அனைவரும் இனி, மலிவான விலையில் தரமான வீடு வாங்கலாம் என்ற நிலை சாத்தியமாகும் என்கிறார், த்வஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா வி எஸ் (Adithya VS) கூறுகிறார்.

ALSO READ | Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News