ரூ.12,000திற்கு மலிவான சீன மொபைல்களுக்கு விரைவில் தடை - மத்திய அரசு!
இந்தியாவில் ரூ.12,000திற்கு குறைவான விலையில் விற்கப்படும் சீன மொபைல்களை மத்திய அரசு விரைவில் தடை செய்யவுள்ளது.
சீனாவை பொருத்தவரை உலக தொழில் நுட்பத்திற்கு முன்னோடியாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் மளிவான விலையில் கன்கவர் பொம்மைகள் முதல் கையிலேயே வைத்துக்கொள்ளும் செல்போன் வரை அனைத்தையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா சற்றும் மாசுபடாத சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
எத்தனை முறை "பாய்காட் சீனா பிராடக்ட்" என கோஷங்கள் எழுப்பப்பட்டாலும், இந்தியாவில் இன்று வரை சீனப் பொருட்களுக்கு மவுசு இன்னும் குறையவில்லை என்பதில் மாற்றம் இல்லை.
அதிலும் சீன செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் செல்போன் பயன்பாடு கடந்த 10 வருடங்களில் அசூர வளர்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணமும் இந்த சீன செல்போன் நிறுவனங்கள் தான். குறிப்பாக சீன செல்போன்கள் விலை மளிவாக இருப்பதும், குறைந்த விலையில் மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருப்பதும் சீன மொபைல்களின் முக்கிய சிறப்பம்சம்.
மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி - Viral News
ஹுவாய், ஒன் பிளஸ், ஸியோமி, ரியல்மீ, விவோ, ஓப்போ, மெய்ஸூ மற்றும் பல சீன செல்போன் நிறுவனங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகவும் விரும்பி பயன்படுத்துகின்றனர்.
இதில் ஒன்பிளஸ், ஹூவாய் போன்ற நிறுவனங்கள் குறைந்தது 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரையிலான விலையில் ஸ்மார்ட் செல்போன்களை விற்கின்றன.
ஆனால், ஸியோமி, ரியல்மீ, ஓப்போ, வீவோ ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களின் விலை ரூ. 6000த்தில் இருந்து தொடங்குகிறது. அதோபோல் 6000 ரூபாயில் நல்ல சிறப்பம்சங்களுடன், திறன்மிகு ஸ்மார்ட் போன்களை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது குறிப்பிடதக்கது. இதனால் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் இந்த மளிவு விலை செல்போன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
மளிவு விலை என்பதால் நடுத்தர மக்களுக்கும் அதிகமாக இந்த நிறுவனங்களை சார்ந்து உள்ளனர் என்பது மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் மொத்தமாக விற்பனையாகும் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் சதவீதங்கள் குறித்த செய்தி அறிக்கை ஒன்று அண்மையில் வெளியானது.
அதில் 27 சதவீதம் ஜியோமி போன்களும், 16 சதவீதம் விவோ ஃபோன்களும், 13 சதவீதம் ரியல்மீ ஃபோன்களும், 11 சதவீதம் ஓப்போ போன்களும் விற்பனையாகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்
இது ஒரு வகையில் ஏழை எளிய இந்திய மக்களை தொழில்நுட்ப பாதையில் காலடி எடுத்து வைக்க உதவுகிறது என்றாலும், இந்த சீன செல்போன் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், இந்திய செல்போன் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல இந்திய நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேபோல் பலர் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ரூ.12,000திற்கு குறைவான விலையில் விற்கப்படும் சீன ஃபோன்களை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸியோமி உள்ளிட்ட சீன போன் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்திக்க நேரும் என கருதப்படுகிறது. அதேபோல், இந்த நிறுவனங்களின் சந்தை இந்தியாவில் சுருங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே சீனாவின் பங்களிப்புடைய டிக் டாக், பப்ஜி உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக இந்தியாவில் சீனாவின் மற்றொரு சாம்ராஜியத்தை முடக்கும் விதமாக மத்திய அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ