சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்துவருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் 2018ஆம் ஆண்டே நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் இந்தாண்டோடு நிறைவடைய இருக்கிறது. இந்த சூழலில்தான், 20ஆவது கம்யூனிஸ்ட் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டில், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜி ஜின்பிங் தான் அதிபராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அந்த வகையில், ஜி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தலைநகர் பெய்ஜிங்கில் பலரும் போராட்டம் நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 'பின் வாங்க மாட்டோம்...' - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆவேச பேச்சுக்கு தைவான் பதிலடி; பரபரப்பாகும் போர்க்களம்


இந்நிலையில், ஜி ஜின்பிங்கை அரசை எதிர்த்து நடைபெற்ற தெருமுனை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வீசாட் (WeChat) சமூக வலைதளத்தில் பதிவிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், நூற்றுக்கணக்காணோர் தங்களின் கணக்குகளை மீண்டும் திறந்துவிடுக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


அதுமட்டுமின்றி, சிலரின் கணக்குகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக் வலைதளங்கள் சீனாவில் இல்லாத நிலையில், வீசாட் தளம் சீனர்களின் வாழ்வின் ஓரங்கமாக மாறிவிட்டது. 


அதில்தான், தங்களது தொலைத்தொடர்புகள், பணபரிவர்த்தனை, கரோனா தொற்று கண்காணிப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் சீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீசாட் ஆஃப் மூலம் அரசு, அதன் பொதுமக்களை உளவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. 


வீசாட் கணக்கை திரும்ப பெற வேண்டி பொதுமக்கள் பலரும் அந்த தளத்திற்கு தங்களின் மன்னிப்பை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, மற்றொரு சீன சமூக வலைதளத்தில் ஒருவர்,"எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன். நான் உறுதியளிக்கிறேன்.  கண்டிப்பாக இனி உங்களின் (வீசாட்) வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். 


மற்றொருவர்,"உங்கள் நிறுவனம் (வீசாட்) எனது கணக்கின் மீதான தடைநீக்கும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை போன்றவற்றை மீண்டும் பதிவிட மாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று மற்றொருவர்,"நான் உங்களின் தளத்தை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். அதில், எனது நண்பர்களுடனான முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளன. தயவுசெய்து எனது கணக்கை ஒப்படைத்து விடுங்கள்" என கோரிக்கை விடுத்துள்ளார். 


மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ