சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Redmi 7A-வை வரும் ஜூலை 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று நிறுவனத்தின் உயர் நிர்வாகி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து Xiaomi இந்தியா நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "Mi ரசிகர்களே, இதோ பரபரப்பான விஷயம். ஜூலை 4 ஆம் தேதி #Redmi7A-வை அறிமுகப்படுத்த உள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.


தற்போது வெளியாகவுள்ள Redmi 7A அதன் முன்னோடி Redmi 6A-வை விட சக்திவாய்ந்த செயலியைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


"#Redmi4A, #Redmi5A, & #Redmi6A ஆகியவை குவாட்கோர் செயலியைக் கொண்டிருந்தன. #Redmi7A ஒரு படி மேலே செல்லும்" என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.


#Redmi7A ஆனது ஏற்கனவே சில சர்வதேச சந்தைகளில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட்டுடன் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே #Redmi7A ஆனது முந்தைய பதிப்புகளை விட மிக திறன் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


#Redmi7A ஆனது HD + ரெசல்யூஷனுடன் 5.4” ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒளியியலைப் பொறுத்தவரை, இது முன்பக்கத்திலும் பின்புறத்திலும் ஒற்றை சென்சார் கொண்டிருக்கும் எனவும்., பின்புறம் 13MP கேமரா சென்சார், ​​5MP முன்புறம் கேமராவை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Android 9 Pie அடிப்படையிலான தொலைபேசி MIUI 10-ல் இயங்கும் எனவும், 4000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.