இந்திய பயனர்களின் தகவலை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக ஸ்னூப்பிங் வரிசையில் வாட்ஸ்அப் கூறுகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா பயனாளர்களின் கட்செவி அஞ்சலின் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அதற்க்கு கட்செவி அஞ்சல் நிறுவனம் பதிலளித்துள்ளது.


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (Whatsapp) மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன், சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியானது. பெகாசஸ் என்ற இஸ்ரேலிய ஸ்பைவேர் மென்பொருள் மூலம் அவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறி இருந்தது. இந்தியர்கள் பலர் உளவு பார்க்கப்பட்டதாக கூறியதால், இது பற்றி நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கட்செவி அஞ்சல் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


இதனையடுத்து வாட்ஸ்ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர் இந்தியாவிற்கு அளித்துள்ள விளக்கத்தில், பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்தியர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவது குறித்து மே மாதமே இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, பாதுகாப்பு பிரச்னைகளை சரி செய்யம்படி கூறி இருந்தோம். சர்வதேச அரசு அமைப்புக்களிடமும் இதை வலியுறுத்தி இருந்தோம். NSO எனப்படும் உளவு மால்வேர் கணக்கர்களின் தகவல்களை குறிவைப்பதாக நாங்கள் கண்டறியந்த உடனேயே கோர்ட்டில் தெரிவித்து விட்டோம். 


இந்திய அரசின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். பயனார்கள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வாட்ஸ் ஆப் தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.