மும்பை: தொழில்நுட்ப கோளாறு காரணாக மும்பை விமான நிலையத்தில் கணினிகள் செயலிழந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை விமான நிலைய கணினிகள் செயலிழந்தது. இதனையடுத்து விமான நிலையப் பணிகள் சற்று தாமதமடைந்தது.


எதிர்பாராத ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணிகள் தாமதமடைந்ததாகவும், ஏற்பட்ட கோளாறினை சரிசெய்யும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் வினால நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் இந்த கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களில் மும்பை சத்ரபதி விமான நிலையமானது மிகவும் தருக்கான விமான நிலையம் ஆகும். வானிபம் செய்பவர்கள் அதிகம் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் ஏற்படும் பயண நெருக்கமும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 45 மில்லியல் பயணிகள் இந்த விமான நிலையத்தில் பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் இன்று மாலை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறானது மும்பை விமான பயணிகளிடையே சற்று அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது!