Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி என்பது அதன் இயங்குதளத்தை மேம்படுத்த அடிக்கடி அதனை அப்டேட் செய்து கொள்வது வழக்கம். இதன்மூலம் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குகிறது எனலாம். வாட்ஸ்அப்பில் சில நாள்களுக்கு முன் வந்த Whatsapp Channel, Whatsapp Payments போன்றவறை பயனர்களுக்கு சிறந்த பலனை அளிக்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிறது புதிய அப்டேட்


அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியின் அடுத்தகட்ட அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இனிமேல், நீங்கள் உங்களின் சேட்டில் பழைய உரையாடலை தேடி, கஷ்டப்படவே வேண்டாம். அதனை எளிதாக தேட உதவும் புதிய தேடல் அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


வாட்ஸ்அப் கொண்டுவர உள்ள இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் தங்களின் சேட்டில் தேதியை உள்ளீடு செய்து பழைய செய்திகளைத் தேட முடியும். இதற்காக சேட் பக்கத்தில் சர்ச் பாரில் காலண்டர் வசதியை வாட்ஸ்அப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் குறித்த வெளியாகி உள்ள அனைத்து தகவல்களையும் இங்கே காணலாம்.


மேலும் படிக்க | Whats App Update: இந்த போன்களுக்கு Goodbye சொன்ன வாட்ஸ்அப்..! சாரி பாஸ்


லீக் ஆன தகவல்கள் என்ன?


வாட்ஸ்அப் செயலின் அடுத்த அப்டேட் குறித்து வெளியான சமீபத்திய தகவல்களின்படி, வாட்ஸ்அப் செயலி அதன் இணைய பயனர்களுக்கு புதிய தேடல் அம்சத்தை விரைவில் கொண்டு வரப் போகிறது என்றும், இந்த அம்சத்தின் உதவியுடன், சேட் பக்கத்தில் பழைய செய்திகளைத் தேடுவது எளிதாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், இந்த அம்சம் இன்னும் முழுமையடையாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் இது வெளியிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 


வெளியான ஸ்கிரீன்ஷாட்டில் வாட்ஸ்அப் சேட்டைகளை தேட சேட் பக்கத்தில் புதிய காலண்டர் ஆப்ஷனை வழங்கும் என தெரிகிறது. இந்த பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், பயனர்கள் தாங்கள் ஒரு செய்தியைத் தேடும் தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிகிறது, இதில் தேதியை உள்ளிட்ட பிறகு, அந்த செய்தி திரையில் தெரியும் என கூறப்படுகிறது. 


இது முதல் முறை அல்ல


இந்த தேடல் அப்டேட் குறித்த விவரங்கள் வெளிவருவது இது முதல் முறையல்ல என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. முன்னதாக, iOS 22.24.0.77 அப்டேட்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் போது இந்த காலெண்டர் உடன் வரும் தேடல் வசதி iOS பயன்பாட்டில் காணப்பட்டது. மொபைல் செயலியுடன், நிறுவனம் இந்த அம்சத்தையும் விரைவில் இணைய பதிப்பிலும் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


மேலும் படிக்க | தீபாவளிக்கு பிடித்தவர்களுக்கு ஐபோன் கிப்ட் பண்ணுங்க... ஆப்பிளின் பண்டிகை கால சேல் தொடக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ