தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது பழத்தை கட்டிவருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் காலூன்றியுள்ள கொரோனா வைரஸ் தனது பழத்தை கட்ட துவங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 129 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர். 


இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க மாநில அரசும் மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒருகட்டமாக  நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதே போன்று பள்ளி , திரையரங்கு ,  பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.


இந்த சூழ்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது..... "புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தவும் மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடபட்டுள்ளது.