இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTC-ல் போலி கணக்குகளை அகற்ற, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC-ன் இந்த அதிரடி முடிவால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சேவையானது பயனர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாய் அமையும் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.


IRCTC-ன் இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கையில் பெரும்பான்மை சமையங்களில் முகவர்களின் தாக்கம் அதிகம் நிலவுகிறது. போலி கணக்குகள் உதவியால் இந்த முகவர்கள் தட்கால் டிக்கெட்டுகளை பெற்று, அதனை பயணிகளுக்கு கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவல்களின் பேரில், இந்த நடவடிக்கைகளை குறைக்க ஏதுவாக IRCTC இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது. 


தற்போது IRCTC தளத்தில் உள்நுழைய வேண்டுமெனில் பயனர்கள் தங்களது கைப்பேசி எண், User ID போதுமானது. ஆனால் இந்த காரணிகளால் போலி கணக்குக்களை கொண்டு முகவர்கள் டிக்கெட்டுகளை தீர்த்துவிடுவதால், இனி IRCTC தளத்தில் உள்நுழைய வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண்னினை உள்ளிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கு ஏற்ற வகையில் வலைதளத்தில் மாற்றங்கள் கொண்டுவரப் படும் எனவும் தகவலகள் தெரிவிக்கின்றன.


எனினும், அடையாள அட்டையினை சரிபார்க்கும் பணியினை கூடுதலாக இணையப்பக்கத்தில் இணைக்கும் பட்சத்தில் இணையப்பக்கத்தின் செயல் திறன் குறையும், பயனர்கள் டிக்கெட் முன்பதிவின் போது மேலும் சிறமப்படுவர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிக்கெட் முன்பதின் ஒவ்வொரு முறையும் அடையாள அட்டையினை சமர்பிப்பதற்கு பதிலாக, IRCTC கணக்கினை உருவாக்கும் போதே அடையாள அட்டை விவரங்களை பெற்று போலி கணக்கு உருவாக்கத்தினை தடுக்கலாம் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


IRCTC இணையப்பக்கத்தில் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது டிக்கெட்டிற்கான பணத்தினை இணைய வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டுகள், ரொக்க அட்டைகள், ஈ-பணப்பைகள் மற்றும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) / பாரத் இன்டர்ஃபேஸ் மனி (BHIM) போன்ற பணமற்ற பரிவர்தனைகள் மூலம் செலுத்தலாம். எனவே வெகுஜன பயணிகள் இந்த இணையத்தின் உதவியை நாடி வருகின்றனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் படி விற்கப்பட்ட டிக்கெட்டுகளில் 66% டிக்கெட்டுகள் IRCTC இணையப்பக்கத்தின் வாயிலாகவே விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.