உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ). நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வரும் இந்த வாரியத்தின் வெப்சைட் www.bcci.tv இது. இதில் இந்திய கிரிக்கெட் அணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள், போட்டியின் புகைப்படங்கள், அறிவிப்புகள், போட்டி தொடர்பான நேரலை ஆகியவை உடனுக்குடன் அட்பேட் ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஏராளமான ரசிகர்கள் இந்த வெப்சைட்டை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஜூனியர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்ற நாளில் இருந்து இந்த வெப்சைட் முடங்கிவிட்டது. இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பி.சி.சி.ஐ அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.


ஏனென்றால் டொமைனை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். பிப்ரவரி 3, 2018-ல் புதுப்பித்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததால், ஞாயிறுக்கிழமை மாலை வரை பி.சி.சி.ஐ இணையதளம் முடங்கியது.



இந்த டொமைன், ஐ.பி.எல்-லின் முன்னாள் தலைவர் லலித் மோடி பெயரில் இருக்கிறது. நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை விதித்திருப்பதால், அவர் இப்போது லண்டனில் வசித்து வருகிறார். 


அவர், பணம் கட்டாமல் டொமைனை புதுப்பிக்காததால் வெப்சைட் முடங்கியது தெரிய வந்தது. பிறகு லலித் மோடி அலுவகத்துக்கு தகவலைத் தெரிவித்து பணத்தைக் கட்டி டொமனை மீட்டுள்ளனர்.


லலித் மோடியால் பி.சி.சி.ஐ இணையதளம் முடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மீண்டும் இயக்கத்திற்கு வந்துள்ளது.