டெல்லி முதல் வாரணாசி வரை இயக்கப்படும் ரயில் சேவையான 'வந்தே பாரத்' ரயில் பழுதாகியதால் பாதியிலேயே நின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று தனது முதல் சேவையினை துவங்கிய வந்தே பாரத் ரயில், டெல்லியில் இருந்து சுமார் 200 கீமி தொலைவில் பழுதாகி நின்றுள்ளது. ரயிலின் இறுதிப்பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் சேவையிலேயே நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகளிடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் உண்டாகியுள்ளது.


முன்னதாக, அதிவேக ரயில் எனும் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் கொடியசைத்து தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.



கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி ரயில் பாதிப்பு ஆனது உத்திரபிரதேச மாநிலம் துண்டாலா பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. நாளை டெல்லி திரும்புவதன் மூலம் தனது முதல் பயணத்தை முடிக்கவிருந்த ரயில் வந்தே பாரத் ரயிலில் இருந்து இன்று விடியற்காலை வாக்கில் சப்தங்கள் வந்ததாகவும், இரயில் நான்கு பெட்டிகளில் அதிக எடை எச்சரிக்கை ஒலி எழுந்ததாகவும் தெரிகிறது.


இந்நிலையில் தற்போது பழுதாகி நின்றுள்ள ரயிலினை சீரமைக்கும் பணி தொடந்து நடைப்பெற்று வருவதாகவும், பழுது சரி செய்யும் பட்சத்தில் பயணிகள் அதே ரயிலில் டெல்லி கொண்டு வரப்படுவர் எனவும், இயலாத பட்சத்தில் அருகில் இருக்கும் ரயில் சீரமைப்பு முகாப்பிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், ரயிலில் இருக்கும் பயணிகள் மாற்று ரயில் மூலம் டெல்லி அழைத்து வரப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.