புதுடெல்லி: உலகின் முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி பேசுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பெயர் முதலில் எடுக்கப்படும். ஆப்பிள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், அதன் ஸ்மார்ட்போன்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதன்படி iPhone 11 ஐ ரூ. 30,900க்கு வாங்க அரிய வாய்ப்பு வந்துள்ளது. இதன் முழு விவரத்தை விரிவாக அறிவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் 11 இல் டீல்
iPhone 11 மாறுபாடு இன் ஒரிஜினல் விலை ரூ.49,900 ஆகும். ஆனால் அமேசானிலிருந்து, (Amazon Sale) இந்த ஸ்மார்ட்போனில் வங்கிச் சலுகையும், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுவதால், குறைந்த விலையில் இந்த போனை வாங்கலாம்.


ALSO READ | Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?


இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
iPhone 11ல் கிடைக்கும் வங்கிச் சலுகையின்படி, இந்த போனை எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு அல்லது கோடக் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தினால், 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை ரூ.49,900க்கு பதிலாக ரூ.45,900க்கு வாங்க முடியும்.


இந்த டீலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் நீங்கள் ரூ.15,000 வரை அதிகமாகச் சேமிக்கலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் இந்த சலுகையின் முழு பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.45,900 இல் இருந்து ரூ.30,900 ஆக ஆகும்.


iPhone 11 அம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தில், iPhone 11 இன் 64 ஜிபி மாறுபாடு பற்றி பேசப்படுகிறது. ஏ13 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் நீங்கள் இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறுவீர்கள், இதில் 12MP அல்ட்ரா-வைட் மற்றும் 12MP அகல கேமரா கிடைக்கும். கூடுதலாக, செல்பி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் இந்த போனில் 12எம்பி ட்ரூ டெப்த் முன்பக்க கேமராவும் வழங்கப்படும்.


ALSO READ | Flipkart Offer! வெறும் ரூ.4,500க்கு Samsung 32-இன்ச் Smart TV வாங்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR