Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா?

Flipkart Big Bachat Dhamal Sale தொடங்கிவிட்டது... இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல தயாரிப்புகளில் மாபெரும் தள்ளுபடி கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 09:27 AM IST
  • இன்று முதல் 3 நாட்களுக்கு ஃபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை
  • iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
  • மெகா ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளவும்
Flipkart offer: ஹலோ! iPhone 12க்கு 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி! ஆர்டர் போட்டாச்சா? title=

புது டெல்லி. Flipkart அதன் பயனர்களுக்கு அவ்வப்போது தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது, இதில் பல வகையான கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. Flipkart இன் 'எலக்ட்ரானிக்ஸ் விற்பனை' சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

Flipkart Big Bachat Dhamal Sale தொடங்கிவிட்டது... இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல தயாரிப்புகளில் மாபெரும் தள்ளுபடி கிடைக்கும். 

இந்த சலுகை விற்பனை பிப்ரவரி 5 வரை மட்டுமே இருக்கும். அதிலும் iPhone 12 இன் 128GB மாடலில் கிடைக்கும் சிறப்பு சலுகையை தவற விடவேண்டாம். இந்த போனுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். 

இந்த ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் (Flipkarrt sale) பல வகையான தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டாலும், ஐபோன் 12 இல் உள்ள சலுகை அட்டகாசமாக உள்ளது. இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனில் நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.

iPhone 12 இல் அற்புதமான தள்ளுபடிகளைப் பெறுங்கள்

ஐபோன் 12 இன் 128 ஜிபி மாடல் போனில் விலை ரூ.70,900. இதில், 8% தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு அதன் விலை ரூ.64,999 ஆக குறையும். அப்புறம் எப்படி 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்ற கேள்வி எழுகிறதா?

SALE

இந்த போனை வாங்கும் போது, ​​Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் அதாவது ரூ.3,250 கிடைக்கும். எனவே கிடைக்கும் தள்ளுபடி மொத்தம் ரூ.9,151 ஆக இருக்கும். எனவே iPhone 12 இன் விலை ரூ.61,749 ஆகக் குறையும்.

இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ஐபோன் 12 ஐ வாங்கினால் ரூ.15,850 வரை சேமிக்கலாம்.

இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் (Flipkarrt sale) முழுப் பலனையும் கிடைத்தால், ஒட்டுமொத்தமாக ஐபோன் 12 இல் ரூ.25,001 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் எடுத்துக் கொண்டால், புதிய ஐபோனை 45,899 ரூபாய்க்கு வாங்கலாம்.

ALSO READ | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale

ஐபோன் 12 ஆப்பிள் போனின் சிறப்பு அம்சங்கள்
ஐபோன் 12 இன் 128 ஜிபி ஆப்பிள் போனில், A14 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோனில், இரட்டை பின்புற கேமரா உள்ளது. இவை இரண்டும் 12MP சென்சார்கள் கொண்டவை.

செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 5ஜி சேவைகளை ஆதரிக்கும் இந்த ஆப்பிள் ஐபோன், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இது இரண்டு சிம் கார்டுகளை போடக்கூடிய போன் ஆகும்.

விரைவான சார்ஜிங் வசதி கொண்ட இந்த iPhone 12 ஐ வாங்கும்போது, ​​USB Type-C கேபிளும் இருக்கும். இந்த போனுக்கு ஒரு வருட வாரண்டியும் உண்டு.

Flipkart இன் Big Bachat Dhamal (Flipkarrt sale) விற்பனையில் கிடைக்கும் இதுபோன்ற அனைத்து சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனை மூன்று நாட்களுக்கு மட்டுமே உள்ளது. பிப்ரவரி 5 ஆம் தேதி முடிவடையும் என்பதால் ஐ போன் வாங்க விரும்புபவர்கள் உடனே வாங்க முந்துங்கள்.

ALSO READ | 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட Redmi Note 10S இல் பெரும் தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News