EV கார் வைத்திருந்தால்... வெயில் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Safety Measures For EV Cars In Summer: அதிகம் வெயில் இருக்கும் நேரத்தில் உங்களின் எலெக்ட்ரானிக் கார்களை பராமரிக்கும் வழிமுறைகளை இங்கு காணலாம்.
Safety Measures For EV Cars In Summer: கார் என்பது ஒரு வாகனம் என்பதை தாண்டி இந்திய சமூகத்தில் ஒரு அந்தஸ்து சார்ந்த பொருளாக மாறிவிட்டது. இதற்கு காரணம், காரின் விலை எனலாம். இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாக இருந்த கார் என்பது இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் கடன் உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றை வங்கும் திறன் அதிகரித்திருக்கிறது எனலாம்.
அந்த வகையில் கார்களில் தற்போது எலெக்ட்ரானிக் கார்களும் அதிகம் விற்பனையாகிறது. ICE கார்களை விட EV கார்கள் அதிக விலை என்றாலும், EV கார்களுக்கும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் பல நிறுவனங்கள் EV கார்களை சந்தையில் இறக்கியிருந்தாலும், டாடா நிறுவனத்தின் EV கார்கள் அதில் முன்னணியில் இருக்கிறது எனலாம்.
EV கார்களுக்கான வரவேற்பு...
வருங்காலங்களில் EV கார்களும், அதற்கான வரவேற்பும் எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம். முதலீட்டாளர்கள் கூட எலெக்ட்ரானிக் வாகனங்கள் மீதும் பேட்டரிகள் மீதும் தான் அதிகமாக முதலீடு செய்கின்றனர். ஏனென்றால் எலெக்ட்ரானிக் வாகனங்களும், அதன் பேட்டரிகளும் எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய உயரங்களை தொடும் என கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்டில் OnePlus 12R 5G போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்...!
இது ஒருபுறம் இருந்தாலும் எலெக்ட்ரானிக் கார்கள் தற்போதுதான் பழக்கத்திற்கு வந்துள்ளது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதனை கையாளவும், அதனை பராமரிக்கவும் போதுமான முன்னுதாரணும், வழிகாட்டிகளும் இருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களின் வாகனங்கள் அடிக்கடி பிரச்னையில் சிக்கலாம். அந்த வகையில், தற்போதைய கோடை காலத்தில் EV கார்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை இங்கு காணலாம்.
பேட்டரி வெப்பநிலை
கோடை காலத்தில் எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியின் வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால், அந்த காரின் திறன் மற்றும் பேட்டரியின் ரேஞ்ச் குறையும் எனலாம். ரேஞ்ச் என்றால் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து அது எவ்வளவு தூரம் செல்கிறதோ அதுதான் ரேஞ்ச். எனவே, பேட்டரி அதிகம் சூடானால் இந்த ரேஞ்ச் குறையும் எனலாம்.
அத்தகைய சூழ்நிலையில், நேரடியாக சூரிய ஒளி வரும் இடத்தில் காரை நிறுத்துவதைத் தவிர்க்கவும். குடியிருப்பின் கீழ் தளத்திலோ அல்லது நிழலாக இருக்கும் இடத்திலோ நிறுத்தவும். நிழலான இடம் கிடைக்கவில்லை எனும்பட்சத்தில் சன்ஸ்கிரீன் கவர் கொண்டு காரை மூடி வைக்கவும். அதுவும் நீங்கள் நீண்ட நாளாகவோ அல்லது பல மணிநேரங்கள் எலெக்ட்ரானிக் காரை ஒரே இடத்தில் நிறுத்த போகிறீர்கள் என்றால் குளிர்ச்சியான இடத்தில் நிறுத்தவும்.
சார்ஜிங்
பேட்டரியை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும் என அவசியமில்லை, அதனை தவிர்ப்பது நல்லது. 80 சதவீதம் வரை சார்ஜ் செய்தால் போதுமானது. அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்வது பேட்டரியில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். நீங்கள் நீண்ட தூரம் பயணக்கிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் வழியிலேயே சார்ஜிங் ஸ்டேஷனைக் கண்டு சார்ஜ் செய்யவும்.
நீண்ட தூரம் பயணித்தால்...
நீண்ட தூரம் பயணிப்பதாக இருந்தால் அதற்கு முன் வானிலை முன்னறிவிப்புகளை பார்த்துக்கொள்ளவும். வெப்பம் அதிகமாக இருக்கும் என்றபட்சத்தில், அவ்வப்போது சார்ஜ் செய்வதற்கு காரை நிறுத்தும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி கோடை காலத்தில் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து பராமரிப்பது முக்கியம். இது வாகனத்தின் நல்ல நிலையை பராமரிப்பதோடு பேட்டரியின் ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். கோடையில் டயர் அழுத்தம் குறைத்து வைக்கவும், இது டயர் வெடிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், டயர் அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்கவும்.
ஏசியால் வரும் பிரச்னைகள்
கோடை காலத்தில் எங்கிருந்தாலும் ஏசியை நாம் அதிகம் பயன்படுத்துவோம், குறிப்பாக கார்களில்... இதன் காரணமாக பேட்டரியின் பயன்பாடு அதிகரிக்கிறது. அதனால், தேவையில்லாத போது காரின் ஏசியை அணைத்து குறைவாக பயன்படுத்தவும். ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலம் காரை காற்றோற்றமாக வைத்துக்கொள்ளவும். அதேபோல், காரை எடுக்கும் முன்னரே, ஆன் செய்துவைத்து காரை குளிர்த்துவிட்டால், வாகனம் ஓட்டும் போது பேட்டரியில் அழுத்தத்தை குறையும்.
பிரேக்கிங்..
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதும், திடீர் பிரேக் போடுவதும் பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கும். மெதுவாக, நிதானமாக, பிரேக்கை அதிகம் பயன்படுத்தாதவாறு ஓட்ட முயற்சியுங்கள். மேடான பகுதியில் இருந்து கீழ் இறங்கும் போதோ அல்லது கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி செல்லும் போதோ மறுஉற்பத்தி பிரேக்கிங்கைப் பயன்படுத்தவும். இதன் காரணமாக, பிரேக்கிங் செய்யும் போது உருவாகும் ஆற்றல் மீண்டும் பேட்டரியில் செல்லும்.
மேலும் படிக்க | மழைக்காலத்தில் ரொம்ப உஷாரா இருக்கணும்! கேட்ஜெட்டுகளை பாதுகாப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ