மொபைல் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹூவாய் ஹானர் நிறுவனத்தின், "ஹானர் வியூ-10" ஸ்மார்ட் போன் ஜனவரி 8-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய அப்டேட்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் களத்தில் இறங்கி வருகின்றன. இந்தவகையில், ஹூவாய் ஹானர் நிறுவனமும் தற்போது தங்களின் புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவிலும் அறிமுகபடுத்த உள்ளது.


சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஹானர் "ஹானர் வியூ-10" சர்வதேச அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் விலை இந்தியாவில் 40,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவர இருக்கும் இந்த போன், பிரத்யேக நியூரல் நெட்வொர்க் பிராசஸிங் யூனிட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


இந்த "ஹானர் வியூ-10"-ல் 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 3750 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி,5.99 இன்ச் ஃபுல் எச்டி, 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆகிய சிறப்பு அம்ச்சங்களையும் பெற்றுள்ளது.