Aircel சேவை நிறுத்தப்படும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது, Aircel வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jio சேவை காரணமாகவே Aircel நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது எனவும், இதனால் தங்களது சேவையினை Aircel நிறுத்தவுள்ளது எனவும் தகவல்கள் பரவியது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை தக்கவைத்துக்கொள்ள பிற நிறுவனங்களுக்கு விரைவில் மாறிக்கொள்ளம் படியும் செய்திகள் வெளியாகின.


இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.86 லட்சம் Aircel வாடிக்கையாளர்கள் BSNL சேவைக்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தமிழகத்தில் Aircel சேவையானது சென்னை சேவை, சென்னையை தவிர்த்த தமிழக மாவட்டங்களுக்கு தமிழ்நாடு சேவை என இரண்டு விதமாக வழங்கிவருகிறது. இந்நிலையில் இதுவரை தமிழக சேவை எண்கள் மட்டும் 186135 எண்கள் BSNL சேவைக்கு மாற விண்ணப்பிக்கப் பட்டுள்ளது என BSNL-ன் தமிழ்நாட்டு தலைமை அதிகாரி மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தங்கள் அதிகாரிகள் Aircel வாடிக்கையாளர்களுடன் பெரும் MNP போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து BSNL-ல் இணைய வேண்டும் என்ற விண்ணப்ப மனுகளை பெற்று வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழகத்தை பொருத்தவரை, BSNL 10% வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அதாவது 82.5 லடசம் வாடிக்கையாளரகளை கொண்டுள்ளது. தற்போது Aircel பாதிப்பிற்கு பின்னர் இந்த எண்ணிக்கையானது சுமார் கனிசமாக உயர வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் விரைவில் தமிழகத்தில் 4G சேவையினை வழங்க BSNL முயற்சிகை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.