ஞாநி செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது - கமலஹாசன்!
பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்!
பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்!
இதனையடுத்து பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தனது இரங்கள் செய்தியினை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது...
"திரு. ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்"
என குறிப்பிட்டுள்ளார்!