அமேசான் கிரேட் கோடைகால விற்பனையில் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய டிவியை மாற்றும் திட்டம் உங்களுக்கு இருந்தால் இதுவே சிறந்த நேரம். இந்த விற்பனையின் போது, ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட 4K டிவிகள் மற்றும் நடுத்தர மற்றும் பட்ஜெட் பிரிவு OLED டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். அமேசானில் நடந்துவரும் இந்த சிறப்பு விற்பனையின் போது சோனி, சாம்சங், வூ, எல்ஜி மற்றும் பிற பிராண்டுகளின் டிவிகளை குறைந்த விலையில் வாங்கலாம். இதனுடன், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அமேசானில் ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனி பிராவியா


55 இன்ச் Sony Bravia பிராவியா ஸ்மார்ட் டிவியை அமேசான் விற்பனையின் போது அதிக விலைக்குறைப்பில் வாங்கலாம். இந்த சோனி டிவியில் பிரீமியம் 4K OLED டிஸ்ப்ளே பேனல் உள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இதனுடன், சிறந்த பார்வை அனுபவத்திற்காக டிவியில் XR Cognitive Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், இந்த டிவியில் கேமிங் மோடும் உள்ளது. இதன் மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிவி variable refresh rate, auto low latency mode, gaming experience support ஆகியவற்றுடன் வருகிறது. விலை: ரூ 1,19,990. சலுகை விலை: ரூ. 1,05,025 (வங்கி தள்ளுபடியுடன்). 


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?


சாம்சங்க் கிரைஸ்டல் 4கே


சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே சீரிஸ் ஸ்மார்ட் டிவி Slim design உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியில் 4K பேனல் உள்ளது. இது சிறந்த பட தரத்தை வழங்குகிறது. HDR 10+, PurColor, Mega Contrast மற்றும் UHD Dimming போன்ற பட எஞ்சின் அம்சங்கள் இந்த டிவியில் ஆதரிக்கப்படுகின்றன. இந்த சாம்சங் டிவி 20 வாட் ஸ்பீக்கர் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் வருகிறது. இது Q சிம்பொனி அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் உதவியுடன் வெளிப்புற சவுண்ட்பார் மற்றும் டிவி ஸ்பீக்கர்களில் இருந்து சரவுண்ட் சவுண்ட் அனுபவம் கிடைக்கும். இந்த சாம்சங் டிவியில் ஸ்மார்ட்போன் மிரர் அம்சம் உள்ளது, இது PC mode support உடன் வருகிறது. இதனுடன், இதில் Auto Game modeம் உள்ளது. விலை: ரூ 29,990. சலுகை விலை: ரூ. 26,115 (வங்கி தள்ளுபடியுடன்)


வூ மாஸ்டர் பீஸ் குளோ சீரிஸ்


55-இன்ச் Vu The Masterpiece Glo Series 4K தெளிவுத்திறன் ஆதரவுடன் வரும் பிரீமியம் SmartTV ஆகும். இந்த டிவியின் டிஸ்ப்ளே பேனலின் புதுப்பிப்பு வீதம் 120 ஹெர்ட்ஸ் மற்றும் அதிகபட்ச பிரகாசம் 800 நிட்கள் வரை இருக்கும். இந்த டிவி ஆண்ட்ராய்டு OS இல் இயங்குகிறது. இதில் குரல் கட்டுப்பாட்டுக்கு far-field microphone பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் கிரிக்கெட், சினிமா மற்றும் AI மோடுகள் உள்ளன. விலை: ரூ 66,990. சலுகை விலை: ரூ. 55,490 (வங்கி தள்ளுபடியுடன்)


டிசிஎல் ஆண்ட்ராய்டு டிவி


மலிவு விலை ஸ்மார்ட் டிவியைப் பற்றி பேசுகையில், 40 இன்ச் TCL ஸ்மார்ட் LED டிவியை மிகக் குறைந்த விலையில் இந்த சிறப்பு விற்பனையில் வாங்கலாம். இந்த டிவி Android OS இல் இயங்குகிறது, இதில் பலவிதமான ஆப்கள் மற்றும் கேம்கள் ஆதரிக்கப்படுகின்றன. இதனுடன், TCS இன் இந்த டிவியில் மைக்ரோ டிம்மிங் அம்சம் கிடைக்கிறது. இது சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவியில் 40-இன்ச் முழு HD பேனல் உள்ளது, இது வீட்டிலேயே தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவியில் HDR டிஸ்ப்ளே உள்ளது. இதனுடன் இந்த டிவியில் 20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. விலை: ரூ.21,795. சலுகை விலை: ரூ. 15,490 (வங்கி தள்ளுபடியுடன்)


சோனி பிராவியா 55 இன்ச் டிவி


சோனி பிராவியா ஸ்மார்ட் டிவியின் 55 அங்குல மாடல் இந்த சிறப்பு விற்பனையின் போது மிகப்பெரிய சலுகைகளைப் பெறுகிறது. இந்த சோனி டிவி சிறந்த audio-visual அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவியில் 4K X1 processor உள்ளது, இது வெளிப்புற சத்தத்தை (External noise) குறைத்து படத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த டிவியில் 4K பேனல் உள்ளது. இது அதிக தெளிவுள்ள நேர்த்தியான படத் தரத்தை வழங்குகிறது. இந்த டிவியில் ஓப்பன் baffle ஸ்பீக்கர்கள் சிறந்த ஒலியை வழங்குகின்றன. இந்த டிவி Google TV OS இல் இயங்குகிறது. விலை: ரூ 55,990. சலுகை விலை: ரூ 51,990 (வங்கி மற்றும் கூப்பன் தள்ளுபடியுடன்)


VW 32 இன்ச் ஸ்மார்ட் LED டிவி


 VW 32 இன்ச் ஃப்ரேம்லெஸ் டிவியை மலிவு விலையில் வாங்கலாம். இந்த டிவியில் HD-ரெடி டிஸ்ப்ளே பேனல் உள்ளது, இது IPE டெக்னாலஜி, ஈகோ விஷன், சினிமா மோட் மற்றும் சினிமா ஜூம் அம்சங்களுடன் வருகிறது. இந்த டிவியில் 20 W ஸ்பீக்கர் உள்ளது. இந்த டிவியில் ஸ்கிரீன்காஸ்ட் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5 மற்றும் பிற பயன்பாடுகள் டிவியில் ஆதரிக்கப்படுகின்றன. விலை: ரூ.7,499. சலுகை விலை: ரூ 5,999 (வங்கி தள்ளுபடியுடன்)


கொடக் ஸ்மார்ட் கூகுள் டிவி
 
கோடாக்கின் 65-இன்ச் Matrix Series 4K Smart QLED Google TVயை விற்பனையின் போது மலிவாக வாங்கலாம். அதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த கோடாக் டிவி கூகுள் டிவி இயங்குதளத்தில் இயங்குகிறது. இதனுடன், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு டிவியில் கிடைக்கிறது. இந்த டிவியில் டால்பி விஷன்-அட்மோஸ் ஆதரவு உள்ளது. இது பயனர்களுக்கு வீட்டிலேயே இறுதியான தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவியில், நிறுவனம் QLED டிஸ்ப்ளே பேனலை வழங்கியுள்ளது. இதனுடன், 40W சக்தி வாய்ந்த ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது. விலை: ரூ 49,999. சலுகை விலை: ரூ. 45,499 (வங்கி தள்ளுபடியுடன்).


மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் மொபைலில் உள்ள இந்த 11 ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ