5 நாட்கள் வரை சார்ஜ் செய்ய வேண்டாம்! DOOGEE S89 Pro பேட்மேன் ஸ்மார்ட்போன்
BATMAN Smartphone: DOOGEE S89 Pro பேட்மேன் ஸ்மார்ட்போனில் 5 நாட்கள் வரை சார்ஜ் தாங்கக்கூடிய சூப்பர் பேட்டரி உண்டு... இன்று முதல் விற்பனைக்கு வந்தது
புதுடெல்லி; DOOGEE இன் வலிமையான ஸ்மார்ட்போன் இன்று வெளியாகிறது.12000mAh வலுவான பேட்டரியைக் கொண்டிருக்கும் இந்த போன் என்பது இதன் சிறப்பம்சம். அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால், 5 நாட்களுக்கு சார்ஜ் தாங்கும். போன் தண்ணீரில் விழுந்தாலும் இயங்கும், கீழே விழுந்தாலும் உடையாது. இப்படி சூப்பர் அம்சங்களுடன் பேட்மேனாக களமிறங்கும் DOOGEE S89 Pro ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வோம்...DOOGEE நிறுவனம் இன்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி தனது சூப்பர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
ஸ்மார்ட்போன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 12,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Mediatek Helio P90 சிப் மூலம் இயக்கப்படுகிறது. DOOGEE S89 Pro ஜூலை 29 வரை $239.99க்கு (ரூ. 19,210) விற்பனை செய்யப்படும், அதன் பிறகு அதன் விலை சுமார் $700 (ரூ. 56,033) ஆகும். DOOGEE S89 Pro இன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை அறிந்து கொள்வோம்...
மேலும் படிக்க | Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம்
பேட்மேன் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள DOOGEE S89 Pro
DOOGEE S89 Pro மிகவும் வலுவான ஸ்மார்ட்போன் மற்றும் அதன் பேட்மேன்-தீம் டிஸ்ப்ளே மூலம் பேட்மேன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இதன் கடினத்தன்மை MIL-STD-810H சான்றளிக்கப்பட்டது மற்றும் இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும்.
DOOGEE S89 Pro விவரக்குறிப்புகள்
இது பேட்மேனின் பல வண்ண ஒளியுடன் 6.3-இன்ச் LCD FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, S89 Pro ஆனது 8GB/256GB ரேம்/சேமிப்பு உள்ளமைவைக் கொண்டுள்ளது மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய பக்க பொத்தானைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | நெட்வொர்க் இல்லாத நேரத்திலும் Call செய்யலாம்
64MP பிரதான கேமரா, 20MP நைட் ஷூட்டர், 8MP மேக்ரோ/வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 16MP செல்ஃபி ஷூட்டர் ஆகியவை கொண்ட கேமரா அமைப்பு கொண்டது ஸ்மார்ட்டான இந்த ஸ்மார்ட்போன். 4G இணைப்பு மற்றும் NFC ஐ ஆதரிக்கிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது.
DOOGEE S89 Pro பேட்டரி
அற்புதமான பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்த சாதனத்தின் பிரதான சிறப்பம்சம் என்று சொல்லலாம். 65W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. MIL-STD-810H தரநிலையுடன், Doogee S89 Pro ஆனது IP68 மற்றும் IP69K எதிர்ப்புடன் இணக்கமானது.
Doogee S89 Proக்கான அறிமுக சலுகை, இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ஊக்கமளிக்கிறது. அறிமுகமான முதல் ஐந்து நாட்களில் AliExpress வழியாக $239.99 (ரூ 19,210) தள்ளுபடி விலையில் விற்கப்படும், முன்பு அறிவித்தபடி, இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 25 முதல் விற்பனைக்கு வருகிறது.
மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ