Vivo T1x Launched: விவோவின் பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Vivo T1x Launched: Vivo T1x இந்தியாவில் இன்று அதாவது ஜூலை 20, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர், ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart இல் வாங்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 20, 2022, 04:49 PM IST
  • விவோ டி1எக்ஸ் போன் இன்று அறிமுகம்
  • போனில் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது
  • இதில் மூன்று கேமரா அமைப்புள்ளது
Vivo T1x Launched: விவோவின் பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் title=

உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவருக்கோ புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதுவே சரியான நேரம். அதன்படி விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ டி1எக்ஸ் ஐ இன்று அதாவது ஜூலை 20, 2022 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு என்னவெனில் இதன் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவானது. வாருங்கள் விவோ டி1எக்ஸ் இன் விலை எவ்வளவு, விவரக்குறிப்புகள் என்ன, எப்போது விற்பனைக்கு வரும், ​​​​எங்கிருந்து வாங்கலாம் என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை
பட்ஜெட் விவோ ஸ்மார்ட்போனானது கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை வாங்கும் போது, எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி, ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடியை பெறலாம், அதன்படி இது போனின் விலையை ரூ.10,999 ஆக ஆகும்.

மேலும் படிக்க | WhatsApp Blocked: வாட்ஸ் அப் பிளாக்கை கண்டுபிடிக்க எளிதான வழி

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை எதில்
இந்த விவோ ஸ்மார்ட்போன், விவோ டி1எக்ஸ் ஐ நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆம்., இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 27, 2022 அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இதை இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். ஃபோனை வாங்கும்போது, ​​டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பிற்கான ஒரு வருட சந்தாவையும் நீங்கள் இலவசமாக பெறுவீர்கள்.

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்
விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனில், உங்களுக்கு 6.58-இன்ச் முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலியில் வேலை செய்யும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரோம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியிடப்பட்டது. இதில், உங்களுக்கு 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2எம்பி இரண்டாவது சென்சார் அடங்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது. விவோ டி1எக்ஸ் இல் 8எம்பி முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,999 ஆகவும், 4ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  ஒரே போனில் 2-2 WhatsApp மற்றும் Instagram பயன்படுத்த டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News